Friday, April 20, 2012

பெண்களே romance இன் இயங்கு சக்தி - ஆண்கள் அல்ல.

Posted Image

[Women drive the formation of romantic relationships based on evidence from mobile phone calls and texts]

சுமார் 3 மில்லியன் மக்களின் கையடக்கத் தொலைபேசி அழைப்புகள் மற்றும் பல மில்லியன் ரெக்ஸ் தகவல்களை வைத்து பிரித்தானியாவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இருந்து.. பெண்களே அதிகம் ஆண்களுடன் (கணவர்.. காதலன்) தொலைபேசியில் பேசுவதாகவும் அதுவும் அந்த ஆணுடனான அறிமுகத்தில் இருந்து கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் இது தொடர்வதாகவும் பின்னர் அது அவர்களின் பெண் பிள்ளையுடனான தொடர்புக்கு மாற்றமடைவதாகவும்..ஆண்களிடத்தில் இது வெறும் 7 ஆண்டுகளாகவும் பின்னர் ஆண்கள் வேறு நண்பர்கள் வட்டத்தை நோக்கி நகர்ந்து சென்றுவிடுவதாகவும் தெரியவந்துள்ளது.

அதுமட்டுமன்றி பெண்கள் 30 வயதின் நடுப்பகுதியில் இருந்து 45 வரைக்குள் தமது நெருக்கத்தை பிள்ளைகளோடு அல்லது இளவயதினரோடு அதிகரித்துக் கொண்டு வயதான கணவரை அல்லது காதலரை இரண்டாம் நிலைக்கு என்று.. தூர வைத்து விடுகிறனராம். ஆனால் அதேவேளை 20 வயதுகளின் ஆரம்பத்தில் உள்ள பெண்கள் தமது வயதை ஒத்த ஆண்களோடு அதிகம் உறவாட முனைவதோடு.. கிட்டத்தட்ட அந்த உறவை 15 ஆண்டுகள் வரை நீட்டிக்கின்றனராம். அதன் பின்னர் அந்த ஆண்... குறித்த பெண்ணின் சொந்த மகளால் நிரப்பீடு செய்யப்படுகிறாளாம்.

ஆண்களைப் பொறுத்தவரை அவர்கள் வழமையான பொதுவான வகையில் தான் உறவு நிலைகளை பேணி வருகின்றனராம்.

அந்த வகையில்.. வாழ்வில் ரொமான்ஸ் (romance) மற்றும் உறவுகளை மாற்றி மாற்றி தேர்ந்தெடுப்பது உள்ளிட்ட சமூகக் கட்டமைப்பின் இயங்கு சக்தியாக பெண்களே.. குரங்குகள் அடங்கும் பிரைமேட்டுக்களில்.. உள்ளது போன்று மனித சமூகத்திலும் உள்ளனர் என்கிறது இந்த நவீன ஆராய்ச்சி..!

இந்த நவீன தொழில்புரட்சிக்கு பிறகான உலகில் இந்த மாற்றம் அவதானிக்கப்பட்டுள்ளது. விவசாயப் புரட்சியின் போது ஆண்கள் பிறந்த இடத்தில் நிலைக்க பெண்கள் அவர்களை நோக்கி சென்ற காலம் போய்.. இப்போ.. பெண்களின் தெரிவின் படி.. ஆண்கள் இயங்கும் நிலை தோன்றியுள்ளது..! இது பெண்கள் சமூகத்தின் ஆதிக்க சக்திகளாக உருவாகியுள்ளதை காட்டுகிறது என்று சொல்கிறார்கள் ஆய்வாளர்கள்..! அதாவது.. இரு பாலாரும்.. அதிகாரத்திற்கும்.. இயக்கத்திற்கும் இடையில்.. காலமாற்றத்தோடு... தேவைமாற்றத்தோடு.. பெண்டியுலம் போல அலைந்து கொண்டிருப்பதாக சொல்கின்றனர்..!

பிரதான இணைப்பு இங்கு.

Labels: , , , , ,

பதிந்தது <-குருவிகள்-> at 9:02 am

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க