Thursday, May 10, 2012

கூகிளின் தானியங்கிக் கார் நம் வீதிகளில் ஓடும் காலம் அதிக தூரமில்லை.



1980 களின் நடுப்பகுதில் மிகப் பிரபல்யமாக இருந்த கொலிவூட் (Hollywood) தொலைகாட்சித் தொடரான Knight Rider இல் வலம் வந்த தானியங்கிக் கார் போன்ற கார் இன்று நிஜமாகி உள்ளது. அதனை கூகிள் நமக்காக செய்ய விளைந்துள்ளது.



கூகிள் நிறுவனம் தயாரித்துள்ள (உருமாற்றி அமைக்கப்பட்ட Toyota Prius) தானியங்கி கார் தெருக்களில் ஓடுவதற்கான உத்தியோகபூர்வ அனுமதியை அமெரிக்காவின் Nevada மாநிலம் வழங்கியுள்ளது..! இதன் மூலம் செய்மதிகளின் வழிகாட்டலோடு இயங்கும்.. கூகிளின் தானியங்கிக் காரின் உத்தியோக பூர்வ பாவனை உலகின் வீதிகளில் அதிகரிக்க அதிக காலம் எடுக்கப் போவதில்லை என்பதும் வெளிச்சமாகியுள்ளது.

கூகிள் இணைய உலகில் இருந்து.. அன்ராயிட் மூலம் மென்பொருள் உலகிற்கு தாவி.. இப்போ அதன் வியாபார தந்திரத்தை புதிய கண்டுபிடிப்புக்களோடு.. இயற்கைக்கும் மக்களுக்கும் நன்மை அளிக்கும் தொழில்நுட்பத்தில் புகுத்த விளைந்துள்ளதோடு.. மோட்டார் கார் மற்றும் இயந்திரப் பொறியியல் நோக்கி.. அதன் வியாபார யுக்திகளை நகர்த்த ஆரம்பித்துள்ளது.

இது விடயத்தில் கூகிள் எதிர்காலத்தில் வேர்ஜினுக்கு போட்டியாக அமைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை..!

Labels: , , ,

பதிந்தது <-குருவிகள்-> at 5:48 am

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க