Thursday, June 07, 2012

CT ஸ்கான் மூளை மற்றும் இரத்தப் புற்றுக்கான வாய்ப்பை அதிகரிக்கும்.

CT scan

CT ஸ்கான் என்று அழைக்கப்படும்.. computerised tomography ஸ்கான்.. இளம் பராயம் தொடக்கம் அடிக்கடி செய்யப்பட்டு வந்தால்.. மூளை மற்றும் இரத்தப் புற்றுநோய் தோன்றுவதற்கான வாய்ப்பை அது அதிகரிக்கச் செய்வதாக... பிரித்தானிய நியூகார்சில் பல்கலைக்கழக ஆய்வொன்றில் இருந்து தெரிய வந்துள்ளது.

உடலில் ஏற்படும் உள்ளக காயங்கள்.. மற்றும் உள்ளக நோய் தொற்றுக்களை அறிய CT ஸ்கான் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.

இந்த ஆய்வின் பரிந்துரையின் பிரகாரம்.. CT ஸ்கான் இயக்கத்தின் போது பாவிக்கப்படும் கதிரியக்கம் ஆபத்தான அளவை விட மிகக் குறைவாக தேவைக்கு ஏற்ப பாவிக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி அடிக்கடி CT ஸ்கானை பாவிப்பதை தவிர்ப்பதும் நன்றென கூறப்பட்டுள்ளது.

பிரிட்டனில் இது தொடர்பில் கடுமையான நடைமுறைகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கதாகும்..!

மேலதிக விபரம் இங்கு

Labels: , , , ,

பதிந்தது <-குருவிகள்-> at 5:05 am

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க