Friday, March 01, 2013

ஒரு மூளையில் இருந்து இன்னொரு மூளையை வயர்கள் மூலம் இயக்கி விஞ்ஞானிகள் சாதனை.

அடேய் உனக்கிருக்கிற அறிவு எனக்கு இருந்தா.. என்று அங்கலாய்த்த காலம் எனி மாறிவிடுவதற்கான அறிகுறி தென்படுகிறது.

அமெரிக்காவில்.. இரண்டு தனிமைப்படுத்திய எலிகளை வைத்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் ஒரு எலியின் மூளையில் தூண்டப்பட்ட கணத்தாக்கங்களை மறு எலியின் மூளைக்கு வயர்கள் மூலம் காவி அந்த எலியும் முன்னையதை ஒத்து செயற்படத் தூண்டி ஆய்வாளர்கள் வெற்றிச் சரிதம் படைத்துள்ளனர்.

Two rats
ஆய்வுக்குரிய இரண்டு எலிகளும் தனிமை அறைகளில் அவற்றின் மூளைகள் மட்டும் வயரால் இணைக்கப்பட்ட நிலையில்.

Light switched on
முதலாவது எலி பயிற்றப்பட்டதற்கு அமைய ஒளிரும் மின் விளக்கை கண்டதும்.. அதன் முன்னால் இடமும் வலமுமாக உள்ள இரண்டு பொத்தான்களில் குறித்த மின் விளக்கோடு நெருங்கிய ஒன்றை அழுத்தி அதற்குரிய பரிசை பெற்றுக் கொள்ள தூண்டப்படுகிறது.

Signal sent

முதலாவது எலி மின் விளக்கு எரிய பயிற்றப்பட்ட படி நடந்து கொள்கிறது. பரிசும் கிடைக்கிறது.


Rats get reward
இறுதியில் இரண்டாவது எலிக்கு முதலாவது எலியின் மூளையில் உதித்த எண்ணத்தின் கணத்தாக்கம் வயர்களின் மூலம்.. கடத்தப்பட்ட உடன்.. அதுவும் முதலாவது எலி செய்தது போன்று செய்து பரிசைப் பெற்றுக் கொள்கிறது.

இதே முறையில்... மனிதர்களின் மூளைகளுக்கிடையிலும் தகவல் பரிமாற்றம் செய்ய முடியும் என்று நம்புகின்றனர் ஆய்வாளர்கள்.

இருந்தாலும் இதில் மூளைகளை சரியான இடத்தில் சரியான உணரிகளைப் பயன்படுத்தி இணைத்துக் கொள்வது என்பது சவால் நிறைந்த ஒன்றாகவே இருக்கும். இருந்தாலும் அறிவியல் அதனை எல்லாம் தாண்டி மனிதர்களையும் மூளையோடு மூளை இணைக்கும் காலம் வெகு தூரம் இல்லை என்றால் மிகையில்லை.

மேலதிக விபரம் இங்கு.

Labels: , , , , , , ,

பதிந்தது <-குருவிகள்-> at 11:42 pm

3 மறுமொழிகள்:

Blogger திண்டுக்கல் தனபாலன் விளம்பியவை...

என்னவெல்லாம் நடக்குது...? நன்றி...

Sat Mar 02, 02:01:00 am GMT  
Blogger kuruvikal விளம்பியவை...

நன்றி திண்டுக்கல தனபாலன். தங்கள் வருகைக்கும் நன்றிக்கும். :)

Sat Mar 02, 07:56:00 am GMT  
Anonymous Anonymous விளம்பியவை...

அதெல்லாம் ok முதல்லா மின்சார பிரச்சனைக்கு வழி கண்டு பிடிச்சா நல்லது

Mon Mar 25, 06:03:00 pm GMT  

Post a Comment

<<முகப்புக்குச் செல்க