Friday, March 22, 2013

டைனாசோர்கள் அழியக் காரணம் பூமியுடன் ஒரு வால்நட்சத்திர மோதல்..!

Chicxulub impact

சுமார்.. 60 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் பூமியில் வாழ்ந்த டைனாசோர்கள் என்ற இராட்சத உயிரினங்கள் அழியக் காரணம் என்ன.. இந்தக் கேள்விக்கு இன்னும் சரியான விடை கிடைக்கவில்லை.

Artwork depicting the asteroid impact that may have wiped out the dinosaurs

ஆனாலும்.. சமீபத்தில் மெக்சிக்கோவை அண்டிக் காணப்படும் 180 கிலோமீற்றர்கள் விட்டமுள்ள பள்ளத்தில் மேற்கொள்ளப்பட்ட மீள்ஆய்வில் இருந்து இது விண்ணில் வேகமாகச் செல்லக் கூடிய வால்நட்சத்திரம் ஒன்று பூமியோடு மோதியதன் விளைவாக ஏற்பட்டிருக்கலாம் என்று கருத்துச் சொல்லப்பட்டுள்ளது.

Gravity map of Chicxulub crater, Yucatan Peninsula   Mark Pilkington/Geological Survey of Canada/SPL

முன்னர் இந்தப் பள்ளத்திற்கு ஒப்பீட்டளவில் மெதுவாகச் செல்லக் கூடிய பெரிய விண்கல் ஒன்று மோதியதே காரணம் என்று நம்பப்பட்டு வந்தது. ஆனால் அதற்கான சாத்தியத்தை விட சிறிய ஆனால் வேகமாகச் செல்லக் கூடிய வால்நட்சத்திரம் ஒன்று மோதி இருக்கவே அதிக சந்தர்ப்பம் உள்ளதாக அங்கு நடத்தப்பட்ட இரசாயனக் கனிமங்களின் படிவு.. மற்றும் திணிவிழப்பில் இருந்து கண்டறியப்பட்டுள்ளதாம்.

இந்த மோதலின் விளைவாகத் தோன்றிய.. நெருப்பு.. பூகம்பம்.. எரிமலை வெடிப்புக்கள்.. சுனாமிகள் மற்றும் தூசிப்படலம் வளி மண்டத்தில் எழுந்து படர்ந்து வெப்பநிலையில் குறிப்பிட்ட காலங்கள் தொடர் மாற்றங்கள் ஏற்பட்டதன் விளைவாக.. பூமிப்பந்தில் இருந்து சுமார் 70% உயிரினங்கள் அழிந்து போயுள்ளன. அவற்றில் டைனாசோர்களும் அடங்குகின்றனவாம்.

அண்மையில் பூமியை ஒட்டிக் கடந்து சென்ற விண்கல் மற்றும் ரஷ்சியாவுக்கு மேல் காற்றுமண்டலத்தில் வெடித்துச் சிதறிய விண்கல்லின் விளைவுகள் போன்றவற்றில் இருந்தும் மற்றும் விண்வெளிக் கூறுகளின் பெளதீக.. இரசாயனத் தகவல்களில் இருந்தும்.. பெறப்பட்ட அவதானிப்புக்களின் கீழ் பெறப்பட்ட அவதானிப்புக்களோடு.. இந்த முடிவு பெரிதும் ஒத்துப் போகிறதாம்.

மேலதிக தகவல் இங்கு.

Labels: , , , , ,

பதிந்தது <-குருவிகள்-> at 11:10 pm

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க