Friday, March 08, 2013

மூக்கில் சவ்வு (பொலிப்) வளர்ச்சி..!

ENT_polyp_formation.gif

[சிவப்பில் காட்டப்பட்டவையே அந்த பொலிப்புகள் என்ற இழைய வளர்ச்சி அல்லது அளர்ச்சி]

C0087900-Nasal_polyp_surgery-SPL.jpgsinus-infection-3-e1330411278816.jpg


[மிகச் சுலபமான சத்திரசிகிச்சை. பெரிய வெட்டுக் கொத்து அவசியம் இல்லை. எண்டாஸ்கோப் வழி சத்திரசிகிச்சை]

இந்த சுவாசப் பாதை இழைய வளர்ச்சி எல்லா வயதினரிடையேயும் காணப்படினும்.. 40 வயதுக்கு மேற்பட்டோரில் அதிகம் ஏற்பட வாய்ப்புள்ளது.

இது ஒன்றும் உயிர் ஆபத்து தரும் அளவுக்குப் பெரிய பிரச்சனை அல்ல என்றே கூறப்படுகிறது. ஆனால் இது தீவிரமாக வளரின் சிறிய சத்திரசிகிச்சை அவசியம்.

பொலிப் வளர்ச்சி அதன் ஆரம்ப காலத்தில் இருப்பின்... ஸ்ரோய்ட் வகை மருந்துகள் அல்லது லேசர் சிகிச்சை மூலம் பொலிப் வளர்ச்சியை கட்டுப்படுத்த முனைவார்கள்.

ஆனால் இந்த பொலிப்புக்களில் சில ஆபத்தானவை. புற்றுநோய் வகைக்குரியவை. அவை தொடர்பில் வைத்தியர்கள் மிகக் கவனமாக இருந்து உங்களை வழிநடத்துவார்கள் என்பதால்.. எல்லா பொலிப்புக்களையும் புற்றுநோய்க்குரியவை என்று கருத வேண்டிய அவசியம் இல்லை. அதனால் வீண் பயம் கொள்ளல் அவசியமில்லை. எப்பவும் சிறிய மூக்கடமைப்பு.. மூக்கால் நீர் சிந்துதல்..  மண உணர்ச்சிக் குறைதல்.. சுவை குறைதல்.. அல்லது கண்ணில் பிரச்சனை இன்றி.. நீர்வடிதல்.. மூக்கு நோ.. போன்ற பிரச்சனைகள் ஏற்படும் போதே வைத்தியரிடம் நாடிச் செல்வது நல்லது.

இந்தப் பொலிப்புக்களின் வளர்ச்சியால்.. உங்கள் சுவாசப்பைக்கு செல்லும் காற்றின் அளவில் மாறுதல் ஏற்படுவதால் மூச்சுத் திணறல்.. சோர்வு.. மயக்கம் மற்றும் பொலிப்புக்கள் கொடுக்கும் அழுத்தம் காரணமாக நோவு.. வீக்கம்.. கண்ணில் இருந்து நீர் வடிதல் போன்ற பிரச்சனைகள்..வரலாம். இந்தப் பொலிப்புக்கள் மற்றைய கிருமிகள் வளரப் பெருக  நல்ல வசதி அளிப்பதால்.. பிற சுவாசப் பாதை தொற்றுகளால் ஏற்படும் விளைவுகளும்  ஏற்படலாம். அத்தோடு அதனை அண்டிய அங்கங்களிலும் தொற்றுக்கள் ஏற்படலாம். குறிப்பாக கண்.. காது.. உமிழ்நீர் சுரப்பி.. மூளை.. போன்றவற்றில்.

அதனால் கூடிய விரைவில் பொலிப் நீக்கச் சத்திர சிகிச்சையை மேற்கொண்டு விட்டால் பிரச்சனை இல்லை. எதற்கும் நல்ல நிபுணத்துவ மருத்துவரை நாட வகை செய்யுங்கள்.

சிலவேளைகளில் சத்திர சிகிச்சை ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் செய்ய வேண்டி ஏற்படலாம். குறிப்பாக பொலிப்புகள் மீள மீள வளரும் பட்சத்தில்.

லேசர் சிகிச்சை முறைகளை.. எல்லா நேரமும் பாவிக்க முடியாது. அது வளர்ச்சி சிறிய அளவில் உள்ள போது மட்டுமே பாவிக்கப்படலாம்.

இதனைப் பற்றி விரிவாக எழுதி வீணே நீங்கள் அச்சம் கொள்ளச் செய்ய வேண்டிய அவசியம்  இல்லை என்றே நினைக்கிறேன். இது விடயத்திற்ல்.. எதற்கும் கிரமமாக வைத்தியரின் ஆலோசனைப்படி  நடந்து கொள்ளுங்கள்.

மேலதிக விபரத்துக்கு இந்த இணைப்பில் உள்ள காணொளியைப் பாருங்கள்..

http://www.nhs.uk/conditions/Polyps-nose/Pages/Introduction.aspx

Labels: , , , ,

பதிந்தது <-குருவிகள்-> at 12:31 am

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க