Sunday, July 14, 2013

அழகிகளின் அணிவகுப்பு போல IVF ஆல் முளையங்களின் அணிவகுப்பில் பிறக்கும் பிள்ளைகள்.


குழந்தை கடவுளின் கிருபை என்று கூறித் திரிந்த காலம் மலையேறிவிட்டது. இப்போ குழந்தைகளை நாம் விரும்பும் வடிவில் சோதனைக் குழாய்களில் அல்லது தட்டுக்களில் உருவாக்கிவிட முடியும். இந்த முறைக்கு சுருக்கமாக IVF (விரிவாக.. In vitro fertilisation) என்று பெயரிட்டுள்ளனர்.

இந்த ஐ வி எவ்(F) முறையில் பெண்ணின் ஒரு தனி முட்டையை ஆணின் விந்துக் கலத்துடன் கருக்கட்ட வைத்து அதனை தாயின் கருப்பையுள் செலுத்திவிட முடியாது. மாறாக பல முளையங்கள் உருவாக்கப்பட்டு அதில் சூழலை வென்று குழந்தையாக வளரக் கூடியவற்றை தேர்வு செய்து கருப்பையுள் புதைத்து விடுகின்றனர். உருவாக்கப்படும் முளையங்களில் ஐந்தில் ஒன்றுக்கே இந்த வாய்ப்புக் கிட்டுகிறது.

இதன் போது பல முளையங்கள் கருப்பையில் தரித்து Multiple pregnancy அதாவது பல குழந்தைகளை ஒரு தாய்மையின் போது சுமத்தலுக்கு வாய்ப்பும் ஏற்படுகிறது. முன்னர் எல்லாம் இரட்டைக் குழந்தைகளைப் பெறுவதே ஏதோ அதிசயமாக நோக்கப்பட்டதுண்டு. 

இந்த ஐ வி எவ் என்பது.. அழகிகளை அணிவகுக்கவிட்டு.. ஒரு அழகியை உலக அழகியாக தேர்வு செய்யும் முறைக்கு ஒப்ப உள்ளது.

[மேற்படி காணொளி ஒரு குறிப்பிட்ட வகை designer baby தொடர்பான சாதக பாதகங்கள் பற்றி உரையாடுகிறது. அறிவியல் ஆய்வுகள் மற்றும் வழிமுறைகள் எங்கும் சாதக பாதக விளைவுகள் குறித்து ஆராயப்படுவது வழமையாகும்.]

மேலும்.. இப்போ எல்லாம் நாம் விரும்பக் கூடிய இயல்புடன் கூடிய முளையங்களை உருவாக்கி அழகும் அறிவும் நோய்கள் தீண்டாததுமான (எல்லாம் அல்ல சில வகை புற்றுநோய்கள் மற்றும் பெரும்பாலான பிறப்புரிமை நோய்கள் என்று அமையக் கூடிய நோய்கள்) குழந்தையை உருவாக்கவும் முடியும். இவற்றை designer baby என்று அழைக்கிறார்கள். அதாவது வடிவமைப்புக் குழந்தை என்கிறார்கள்.

இப்ப எல்லாம் குழந்தைகள் வேண்டின் சாமியாரையோ.. ஆலமரத்தையோ.. வேப்பமரத்தையோ  சுத்த வேண்டியதில்லை. நீங்கள் உங்கள் துணையுடன் (துணை இருந்தால்..  இல்லை என்றாலும் கவலைப்பட வேண்டாம். முட்டைகளும் விந்துகளும் அவற்றிற்குரிய வங்கிகளில் சேமிப்பில் உள்ளன) நாட வேண்டியது மேற்படி அறிவியல் ஊடுருவி உள்ள சரியான வைத்தியசாலைகளையே.

மேலும் ஐ வி எவ் தொழில்நுட்பத்துக்கான விலையும் வெகுவாகக் குறைந்துள்ளது.

மேலதிக விபரம் இங்கு.

Labels: , , , , ,

பதிந்தது <-குருவிகள்-> at 11:11 am

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க