Thursday, September 19, 2013

செவ்வாயில் உயிரினச் சுவடு தேடிப் போன கியூரியோசிற்றியின் முயற்சி தோல்வி.

 Rover

[செவ்வாயில் கியூரியோசிற்றி ஆய்வில் ஈடுபட்டுள்ள போது]

செவ்வாயில் மீதேன் (காபன் மற்றும் ஐதரசன் கொண்ட ஒரு வாயு - CH4) வாயுவின் இருப்புப் பற்றி ஆராய அனுப்பப்பட்ட நாசாவின் கியூரியோசிற்றி ரோபோ விண்கலம் அதன் முயற்சில் தோல்வி கண்டதை அடுத்து செவ்வாயில் இன்னும் உயிரினங்கள் குறிப்பாக நுண் உயிரினங்கள் இருக்கக் கூடும் என்ற விஞ்ஞானிகளின் எதிர்பார்ப்பை மலினப்படுத்தியுள்ளதாக நாசாவை ஆதாரம் காட்டி செய்திகள் வெளியாகி உள்ளன.

பூமியின் வளிமண்டலத்தில் மீதேன் வாயு குறிப்பிடத்தக்க அளவில் உள்ளமையும் அதன் பெரும்பகுதி நுண்ணுயிர்களால் குறிப்பாக பக்ரீரியாக்களால் ஆக்கப்படுவதும் குறிப்பிடத்தக்கதாகும்.

செவ்வாயில் மீதேன் இருப்பு கண்டறியப்பட்டிருந்தால்.. அங்கு தற்போதும் உயிரினங்களில் சில வகைகள் வாழக் கூடும் என்ற திடமான நம்பிக்கைக்கு விஞ்ஞானிகள் வந்திருக்க முடியும். ஆனால் அந்த நம்பிக்கை இந்த தோல்வியால் தற்போதைக்கு தகர்ந்து போயுள்ளது.

மேலதிக தகவல்கள் இங்கு..!

Labels: , , , , , ,

பதிந்தது <-குருவிகள்-> at 9:12 pm

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க