Thursday, September 12, 2013

நாசாவின் Voyager -1 விண்கலம் சூரிய மண்டலத்தை விட்டு வெளியேறிச் சாதனை.

 Voyager artist impression

அமெரிக்காவின் நாசா விண்வெளி நிறுவனம் சுமார் 36 ஆண்டுகளுக்கு முன்னர் (1977 இல்) விண்ணுக்கு அனுப்பிய Voyager விண்கலம் நீண்ட பயணத்தின் பின்னர் சூரிய மண்டலத்தை விட்டு வெளியேறி எமது பால்வீதி அகிலத்தின் இன்னொரு பகுதியில் பயணித்துக் கொண்டிருப்பதாக நாசா அறியத்தந்துள்ளது.

மனிதன் உருவாக்கிய ஒரு பொருள் விண்வெளியில் இத்தனை தூரம் பயணித்தமை இதுவே முதற்தடவையும் ஆகும்.

Voyager இப்பொழுது பூமியில் இருந்து சுமார் 19 பில்லியன் கிலோமீற்றர்கள் தொலைவில் உள்ளதாகவும் அதில் இருந்து சமிக்ஞைகளைப் பெற 17 மணி நேரங்கள் ஆவதாகவும் நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அத்தோடு சில சந்தர்ப்பங்களில் Voyager இல் உள்ள உணரிகள் அதன் உள்ளக சூழ்நிலை மாற்றமடைவதை இனங்காட்டியதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Schematic of the Solar System

Voyager இன்னும் 40,000 ஆண்டுகள் தற்போதைய அதன் வேகத்தில் (45 கிலோமீற்றர்கள்/செக்கன்) பயணித்தால் மட்டுமே இன்னொரு நட்சத்திர மண்டலத்தை அடைய முடியும் என்றும் நாசா விஞ்ஞானிகள் எதிர்வு கூறியுள்ளனர்.

Pale Blue Dot

[Voyager எமது பூமியை படம் பிடித்த போது பூமி மங்கலான வெளிர் நீல புள்ளியாகத் தோன்றும் காட்சி.]

மேலதிக விபரங்களுக்கு இங்கு அழுத்துங்கள்.

Labels: , , , , ,

பதிந்தது <-குருவிகள்-> at 8:55 pm

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க