Monday, October 14, 2013

வியாழன்,சனி கிரகங்களில் வைர மழை..!

சூரியக் குடும்பத்தில் உள்ள எம் பூமியில் நீர் மழை... நீர் பனி.. பொழிவது போல.. அதே குடும்பத்தில்  பூமிக்கு அப்பால் உள்ள.. வியாழன் மற்றும் சனிக் கிரகங்களில் வைர மழை பொழிய அதிக வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் அவற்றின் வளிமண்டலங்களை ஆராய்ந்து பெற்ற தரவுகளின் அடிப்படையில்.. கருத்துத் தெரிவித்துள்ளனர்.

Diamonds

மேற்படி இரண்டு கோள்களின் வளிமண்டலத்திலும் மிதேன் என்ற காபன் சார்ந்த இரசாயன வாயு அதிகம் உள்ளதால் அதில் இருந்து கிரபைட் மற்றும் வைரம் போன்ற காபன் சார்ந்த கூறுகள் உருவாகச் சந்தர்ப்பம் உள்ளதாகவும் குறிப்பாக.. கடுமையான மின்னலுடன் கூடிய மழை பெய்யும் போது ஆபரணங்களில் அணியக் கூடிய அளவுடைய வைரம் மழையாகப் பொழிய வாய்ப்புள்ளது என்று விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

Saturn

இந்த வைரம் பின்னர் அக்கிரங்களில் உள்ள வெப்பம் கூடிய இரசாயனக் கடலில் கலந்து கரைந்து விடுகின்றனவாம்.

மேலதிக தகவல் இங்கு.

Labels: , , , , , , ,

பதிந்தது <-குருவிகள்-> at 12:51 pm

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க