Thursday, October 24, 2013

இந்தியாவின் மங்கள்யான் செவ்வாய் பயணம் இந்திய மக்களின் செவ்வாய் தோஷத்தையாவது நீக்குமா..?!

 India's Mangalyaan space craft

செவ்வாய்க் கிரகத்தை ஆராய்வதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ISRO மங்கள்யான் (Mangalyaan) என்ற விண்கலத்தை நவம்பர் திங்கள் 5-ம் நாள் விண்ணில் ஏவ உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

நவம்பர் 5ம் திகதி தென்னிந்தியாவில் உள்ள.. ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து.. இந்திய மங்கள நேரப்படி..  மாலை 3.28க்கு மங்கள்யான் விண்ணில் ஏவப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

இது தான் இந்தியா சந்திரனுக்கு அப்பால்.. பூமிக்கு அப்பால்.. மேற்கொள்ளும் முதல் வேற்றுக்கிரக ஆராய்ச்சி முயற்சி ஆகும். இந்தியாவின் பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம், மார்ஸ் ஆர்பிட்டர் மிஷன், என்ற இந்த மங்கள்யான் கலன் விண்ணில் ஏவப்படவுள்ளதாம்.

_70512372_appletransport3.jpg

இப்படி மாட்டுவண்டியில் தானாம் தொடங்கியது இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி. இப்ப.. இந்திய மக்களில் பாதிப்பேருக்கு தோஷம் பிடித்துள்ள செவ்வாய்க்கே அது போகிறது என்பது நல்ல முன்னேற்றம் தான். 

அதற்குக் காரணம்.. இந்திய மக்களின் உழைப்பு அல்ல. அண்டையில் உள்ள சீன மக்களின் உழைப்பு. அவர்கள் இந்தியர்களை விட விரைவாக விண்வெளியில் முன்னேறி வருவதால்.. இந்தியர்களுக்கு விண்வெளியில் உழைக்க வேண்டிய கட்டாயம். 

2011 இல் சீனா  ரஷ்சியாவுடன் இணைந்து செய்த.. Yinghuo-1 விண்கல செவ்வாய்க்கான பயணம் தோல்வியில் முடிந்ததால்.. இந்தியா அதில் முந்திக் கொள்ள முனைகிறது. இருந்தாலும் மிகவும் கூடிய ஏழைகள் வாழும் இந்திய நாட்டிற்கு.. இந்தப் போட்டா போட்டி தேவைதானா என்ற கேள்வி எழுப்பாதவர்களும் இல்லை..!  மேலும்.. இந்தப் பயணத்தின் பின்னாவது இந்திய மக்களைப் பீடித்துள்ள செவ்வாய் தோஷ மூட நம்பிக்கையாவது நீங்குமா..??! பொறுத்திருந்து பார்க்கலாம். :) :icon_idea:


 India Mars launch stokes Asian space race with China.

மேலதிக தகவல் இங்கு.

Labels: , , , , , , , ,

பதிந்தது <-குருவிகள்-> at 6:54 am

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க