Thursday, October 24, 2013

ICU என்றால் மக்கள் பயப்பிடத்தான் வேண்டுமா..??!



ICU - intensive care unit என்று மருத்துவ உலகில் அழைக்கப்படும் விசேடித்த பாதுகாப்புக்கள் கொண்ட மற்றும் உயிர் பிடிப்பு மற்றும் உடல் கண்காணிப்பு சாதனங்கள் கொண்ட அறையினுள் ஒரு நோயாளி அனுமதிக்கப்பட்டால் அவர் தொடர்பில் வெளியில் உள்ளவர்கள் பலவகையான அச்சத்தை வெளியிடக் காண்கிறோம்.

உண்மையில் அது அவசியம் தானா..??!

அப்படிப்படையில் அந்த அச்சம் அவசியமன்று. நோயாளி தீவிர சிகிச்சைக்கும் கண்காணிப்புக்குள்ளும் விசேட பாதுகாப்பு ஒழுங்குகளுக்குள்ளும் வருகிறார் என்றால் நோயாளின் நிலைமை மிக மோசம் என்று மட்டும் அர்த்தமில்லை. அவருக்கு அத்தகைய ஒரு சூழல் அவசியம் என்றாலும் அது வழங்கப்படலாம்.



குறிப்பாக.. தீவிர விபத்தால் இரத்த இழப்பு.. சத்திரசிகிச்சை.. இதயப் பாதிப்பு.. மூளை செயலிழத்தல்.. சுயாதீனமாக சுவாசிக்க முடியாத நிலை.. தீவிர தொற்றுக்கள்.. மற்றும் இமியுனிற்றி பிரச்சனைகள் உள்ள நோயாளிகள் மற்றும் குழந்தைகளை ICU அவர்களின் தேவைக்கு ஏற்ப அனுமதிக்கப்படுவார்கள். இதனால் நோயாளி தொடர்ந்து வைத்தியர்களின்,தாதியரின் மற்றும் பிற வைத்திய சேவை நிபுணர்களின் நேரடிக் கண்காணிப்பில் தொடர்ந்து வைக்கப்படுவதோடு அவரின் உடல்நிலை குறித்து அடிக்கடி அவதானிப்புக்கள் செய்யப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்படும். அதற்கேற்ப கருவிகள் அங்கு உள்ளன.

அந்த வகையில்.. ICU என்றால்.. ஏதோ ஆள் முடியுற கட்டத்தில் கொண்டு போற இடம்.. என்று கொள்ளக் கூடாது. பதட்டம் அடையக் கூடாது. மாறாக.. நோயாளியும் பிறரும் தெம்போடு.. தம்மை நோக்கி கூடுதல் கவனிப்பு கொண்டு வரப்படுகிறது என்றே நோக்குதல் வேண்டும். வைத்தியர்களுக்கும் தாதிகளுக்கும் தேவையான ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும்..!

ICU இல் இருந்து வெளியேறுபவர்களுக்கு கூடிய கவனிப்பு வேண்டின் அவர்கள் HDU (high dependency unit) க்கு அனுமதிக்கப்படுவார்கள். அதன் தேவை முடிந்ததும்.. நோமல் வாட்டுக்கு (இவற்றில் தரங்கள் உண்டு) அனுமதிக்கப்படுவார்கள். அதன் தேவை முடிந்ததும் வீட்டுக்குச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள்..!



மேலும் சில தகவல்களுக்கு.

Labels: , , , , , , ,

பதிந்தது <-குருவிகள்-> at 1:24 pm

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க