Friday, October 11, 2013

"கடவுளின் துகளை" கண்டறிந்த Prof Peter Higgs இடம் ஒரு மொபைல் போன் கூட இல்லை..!



"கடவுளின் துகளை"  (ஹிக்ஸ் போசான் -The Higgs Boson ) கண்டறிந்த பிரித்தானியாவைச் சேர்ந்த 84 வயதுடைய.. Prof Peter Higgs ஒரு கையடக்கத் தொலைபேசி கூட வைத்திருப்பதில்லையாம். இவர் எடிபரோ பல்கலைக்கழப் பேராசிரியரும் கூட. இருந்தும் தான் நோபல் பரிசை வென்றதை கூட இவர் அறிந்திருக்கவில்லை. இவரின் முன்னாள் அயலவரான ஒரு பெண்மணி இவரை பரிசுபெற்றதற்காக வாழ்த்தப் போகத்தான் இவருக்கு சங்கதியே தெரிய வந்துள்ளது.



2013 ம் ஆண்டுக்கான பெளதீகவியல் அல்லது இயற்பியலுக்கான நோபல் பரிசை வென்றுள்ள பேராசிரியர் ஹிக்ஸ், கடவுளின் துகள் என்ற இந்த பிரபஞ்சத்தில் உள்ள திணிவுக் கூறுகளை ஆக்கியுள்ள மிக அடிப்படைத் துணிக்கை பற்றிய கண்டறிவை 1964 களில்.. முதன்முதலில் செய்தவர் ஆவார்.


இது பரிசோதனை ரீதியாக அண்மையில் ஐரோப்பாவில் மேற்கொள்ளப்பட்ட CERN இன் LHC பரிசோதனையில் கண்டறியப்பட்டிருந்ததாகச் சொல்லப்பட்டுள்ளது.



மேலதிக தகவல்கள் இங்கு.

Labels: , , ,

பதிந்தது <-குருவிகள்-> at 3:09 pm

1 மறுமொழிகள்:

Blogger நம்பள்கி விளம்பியவை...

தமிழ் மனம் வோட்டு + 1

Sat Oct 12, 03:59:00 am BST  

Post a Comment

<<முகப்புக்குச் செல்க