Wednesday, February 26, 2014

நிலாவுடன் மோதிய விண்கல்.

கடந்தவாரம் எமது பூமிக்கு அருகில் உள்ள நிலாவுடன்  விண்கல் ஒன்று மோதியுள்ளது. இதனை ஸ்பெயின் நாட்டைச்சேர்ந்த வானியல் ஆய்வாளர்கள் படம் பிடித்துள்ளனராம்.

நிலாவுடன் அவ்வப்போது விண்கற்கள் வந்து மோதுவது  வழமை எனக் கூறியுள்ள ஆய்வாளர்கள். இந்த விண்கல் சுமார் 500 கிலோ எடைகொண்டது எனக் கூறியுள்ளனர்.

இந்த மோதலின்போதான சிதறல்களை வானியல் ஆய்வாளர்கள் அவதானிக்க முடிந்ததாகவும் கூறியுள்ளனர்.

நிலாவினைச் சுற்றி பூமியைப்போல் வழிமண்டலம் இல்லை. ஆகவேதான்  விண்கற்கள் நேரடியாக வந்து மோதுகின்றன.

நன்றி: ஈழநாதம்.

Labels: , , , , ,

பதிந்தது <-குருவிகள்-> at 5:18 am

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க