Wednesday, June 04, 2014

காசு.. பணம்.. துட்டு.. மனி மனி.. எனித் தேவையில்லை.

100 ரூபா நாணயத் தாளில் காந்தி தாத்தா சிரிக்கிறதா.. சிங்கக் கொடி பறக்கிறதா.. 50 பவுன் நோட்டில்.. கவுன்சிலரா.. சேர்சிலா இருக்கிறது என்ற சண்டை எனி வரப்போறதில்லை.

என்ன ஆச்சரியமா பார்க்கிறேள்.

அதுதாங்க வேர்ச்சுவள் பணப் பரிமாற்றம் ஆரம்பமாகிட்டுது.

நாணயத் தாளாகவோ.. குற்றியாகவோ எனி வரும் காலத்தில் காசைப் பார்க்க முடியாமல் போகலாம்.

உங்கள் சம்பளம்.. ஒரு மொபைல் அப்ஸில் அல்லது ஒரு எலெக்ரானிக் காட்டில்.. வெறும் இலக்கமாக அமுக்கப்பட்டிருக்கும். நீங்க அதனை ஸ்கான் பண்ண வேண்டிய இடத்தில்.. பண்ணிட்டு....செலவு பண்ணுற இடத்தில  செலவு தொகையை கழிக்கப் பண்ணிக்கிட்டு நடையக் கட்ட வேண்டியான்.

காசு தொலைஞ்சிட்டு.. காசில சிங்கக் கொடி பறந்திட்டு.. காசு இல்லை.. பொக்கட் கனக்குது.. என்ற எந்தக் கதையும் இனி வராதுங்க. காசுக்கு அடிபிடி சண்டையும் வராதுங்க. காசடிக்கிற செலவும் அரசாங்கங்களுக்கு மிச்சம்.

அதுமட்டுமல்ல.. உலகத்திற்கே ஒரு நாணயம் என்ற முறை சுலபமாக அமுலாகிடும். இதில் நன்மையும் உண்டு. ஆபத்தும் உண்டு.

வியாபார பரிவர்த்தனைகள் சுலபமாகிடும். மனி எக்சேஞ் என்று இடையில நின்று காசு புடுங்கிற ஆட்களுக்கு வேலை இருக்காது.இந்த வேர்சுவள் காசிலும் அமெரிக்காவின் ஆதிக்கமே உள்ளது. அதுதான் கொஞ்சம் யோசிக்க வேண்டியதாக உள்ளது. இன்றைய அளவில் Bitcoin.. நிழற்பணம். (வேர்சுவள் காசுக்கு தமிழ்.. நாங்க வைச்சது.)  தான் உலகில் அதிகம் அங்கீகரிக்கப்பட்ட பாவனையில் உள்ளது.

எதிர்காலத்தில்.. இந்த பிட்காயினை பாவிச்சு.. ஆப்பிள் நிறுவனப் பொருட்களை குறிப்பாக அப்ஸ் வாங்க வழி செய்யவும் போகிறார்களாம்.


அது போக.. இப்போ கிவ்ட் காட் என்று.. நீங்கள் உங்கள் பணத்தை ஒரு கிவ்ட் காட்டில் போட்டால் போதும். போகும் இடம் எங்கும் வேண்டிய பொருளை வாங்கலாம். ஒவ்வொரு வாங்கலிலும்.. 6% கழிவு தருவாங்க. ஆனால்.. அந்த காட் தொலைஞ்சால்.. காசும் தொலைஞ்சிடும். இந்த தொல்லை வேர்சுவள் காசில் இல்லை.


பிரித்தானியாவில் லவ்ரூசாப் காட்டில் காசு போட்டால் மேற்படி எல்லா இடங்களிலும் பொருட்களை கொள்வனவு செய்திட்டு காசை காட்டக் கொடுத்து இழுத்திட்டு வர வேண்டியான். ஒவ்வொரு கொள்வனவின் போதும் 6% - 10% விலைக்கழிவு கிடைப்பதுடன்.. அந்தக் காசை பின்னர் செலவுக்கு பயன்படுத்தலாம். இந்த காட் சேவைக்காக ஒரு சிறிய கட்டணத்தை சேமிப்பில் இருந்து மட்டும் கழிப்பார்கள். இது வேர்சுவள் காசுப் புழக்கத்திற்கான ஒரு முன்னோடியாகக் கூட இருக்கலாம்.

ஆனாலும்.. கள்ள மட்டை போடுற கூட்டம்.. இணைய திருடர்கள் கூட்டம்.. உங்க வேர்சுவள் மனியை திருடலாம். இருந்தாலும் அதை தடுக்க வழி பிறந்திடும்.

உலகம் இருக்கும் வரை... திருடா பார்த்து திருந்தா விட்டால்.. திருட்டை ஒளிக்க முடியாது என்ற கண்ணதாசனின் வாக்கியம் என்னவோ.. சிரஞ்சீவியா வாழும்.

சில சுவாரசியமான இணைப்புக்கள்.

Apple policy update could allow bitcoin payments

Virtual-currency transactions will be allowed in apps on iPhones and iPads.

Apple warms to apps using virtual currencies

http://www.bbc.co.uk/news/technology-27680109

Labels: , , , , , ,

பதிந்தது <-குருவிகள்-> at 10:25 am

0 மறுமொழிகள்:

Post a Comment

இந்த இடுகைக்கு மேலதிக தொடுப்புச் செய்ய:

Create a Link

<<முகப்புக்குச் செல்க