Saturday, June 20, 2015

உங்க பையன் அல்லது பொண்ணுக்கு நல்ல ஞாபகசக்தியா.. அப்ப அவங்க நிறைய பொய் சொல்ல வாய்ப்புள்ளது.


 Guilty? Me?

 அமெரிக்க மற்றும் பிரித்தானிய பல்கலைக்கழகங்கள் சில இணைந்து 6 மற்றும் 7 வயதுடைய சிறுவர்கள் சிறுமிகள் மத்தியில் நடத்திய ஆய்வில்.. பொய் சொல்லும் பிள்ளைகளுக்கு ஞாபக சக்தி அதிகம் என்பதை கண்டறிந்துள்ளனர்.

இந்த ஆய்வு விளையாட்டில் சீற்றிங்க ( Cheating) செய்வது தொடர்பான பொய் மற்றும் பிள்ளைகள் ஞாபகப்படுத்தி வைத்திருக்கக் கூடிய சொற்களின் எண்ணிக்கை தொடர்பில் தரவுகளை உள்வாங்கி செய்யப்பட்டுள்ளதாக பிபிசி இணையச் செய்தி தெரிவிக்கிறது.

இந்த உளவியல் ஆய்வில்.. சுமார் 114 சிறுவர் சிறுமிகள் பயன்படுத்தப்பட்டுள்ளனராம்.

அதற்காக.. பொய் சொல்லாத.. நேர்மையான.. உங்கள் பிள்ளையின் ஞாபகசக்தியை குறைத்து மதிப்பிடாதீர்கள். அதேவேளை சின்னச் சின்ன பொய்களை சொல்லுது என்பதற்காக பிள்ளை திட்டித் தீர்க்காதீர்கள்.. அந்தப் பொய்களுக்குப் பின்னால் அதன் ஞாபகசக்தி செல்வாக்குச் செய்கிறது என்ற உண்மையை இந்த ஆய்வு பெற்றோருக்கு தந்திருக்கிறது எனலாம்.

மேலும் விபரங்கள் இங்கு.

Labels: , , , , , ,

பதிந்தது <-குருவிகள்-> at 10:16 pm

3 மறுமொழிகள்:

Blogger Unknown விளம்பியவை...

Thanks for a nice share you have given to us with such an large collection of information. Great work you have done by sharing them to all. simply superb.Online Tamil News

Tue Sept 08, 06:58:00 am BST  
Blogger Unknown விளம்பியவை...

Thnxxx

Sun Feb 21, 02:20:00 am GMT  
Anonymous vivegam news விளம்பியவை...

பொய் தானே சொன்னால் சொல்லட்டும் பிள்ளைகள் பாவம்...!!!

Latest Tamil News Online

Wed Mar 02, 12:38:00 pm GMT  

Post a Comment

<<முகப்புக்குச் செல்க