Monday, March 16, 2020

கொரானாவுக்கு எதிரான வக்சீன் சோதனை ஆரம்பம்.


vaccine


அமெரிக்காவில் கொரானா  வைரசுக்கு (கோவிட் 19 - COVID-19) வுக்கு எதிரான வக்சீன் வளமான மனிதர்களில் சோதிக்கப்படும் செயன்முறை ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. இது 16ம் நாள் பங்குனித் திங்கள் 2020 இல் இருந்து நிகழ்த்தப்படுகிறது.

முழு செயற்பாடற்ற.. கொரானா வைரஸ் (Corona Virus) கிருமியை கொண்டதல்லாது.. குறித்த வைரஸ் கிருமியின் ஆர் என் ஏயின் ஒரு பகுதியில் இருந்து பெறப்பட்ட குறித்த வைரஸ் தொற்றை மனித உடல் இனங்கண்டு அதற்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தியை உடலில் வளர்க்கக் கூடிய மூலக்கூற்றின் அடிப்படையில் இந்த வக்சீன் ( Vaccine) தயார் செய்யப்பட்டுள்ளது.

இந்தச் சோதனையின் பின் வக்சீன் உடனடியாக மக்கள் பாவனைக்கு வர முடியாது. சோதனைக்கு உட்படுத்தப்பட்டவர்களின் வக்சீன் உண்டு பண்ணும் விளைவுகள் கண்காணிக்கப்படவும் ஆராயப்படவும் வேண்டும்.

அதில் வெற்றி பெற்றால்.. கொரானா வைரஸ் தாக்கத்திற்கு உள்ளானவர்களில் சோதனைக்கட்டமாக ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையானோரில் இது பரிசோதிக்கப்பட்டு.. மீண்டும் விளைவுகள்.. கண்காணிக்கப்படவும் ஆராயப்படவும் வேண்டும்.

அதன் பின்னர் எல்லா பெறுபேறுகளும் வக்சீன் பாவனைக்கு சாதகமாக அமைந்தால் மட்டுமே இது மக்களின் பாவனைக்காக சந்தைக்கு வர முடியும்.

இதற்கு இன்னும் பல மாதங்கள் வரைபிடிக்கலாம். இந்த அமெரிக்க வக்சீன் சோதனைகள் எல்லாம் முடிந்து மக்கள் பாவனைக்கு வர குறைந்தது 18 மாதங்கள் ஆவது ஆகும்.

மேலும் அமெரிக்காவை போன்று.. பிற நாட்டு மருத்து விஞ்ஞான ஆய்வாளர்களும் அறிவியலாளர்களும்.. இதே போன்ற ஆய்வுகளை தீவிரப்படுத்தி நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்தில்.. லண்டனை தளமாகக் கொண்ட.. இம்பீரியல் கல்லூரி ஆய்வாளர்களும் இந்த வக்சீன் உருவாக்கத்தில் ஆரம்பக்கட்ட வெற்றியை பெற்றுள்ளதாக அறிய முடிகிறது.

மேலும் தகவலுக்கு இங்கு அழுத்தவும்.. Coronavirus: US volunteers to test first vaccine

Labels: , ,

பதிந்தது <-குருவிகள்-> at 4:08 pm

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க