Saturday, May 13, 2023

சீரியல்கள் மூலம் அறிவியல் சார் சமூகத்தை உருவாக்கலாமே.

மருத்துவ ரீதியில் பிறப்புரிமைசார் குறைப்பாடுகளோடு குழந்தை ஒன்று உருவாகி இருந்தால்.. பெற்றோருக்கு இரண்டு தெரிவுகள் வழங்கப்படும்.

ஒன்று தொடர்ந்து குழந்தையை தங்க வைத்து பெற்றெடுத்து வளர்ப்பது. அதில் உள்ள சிக்கல்கள் விளங்கப்படுத்தப்படும்.

இரண்டு.. பெற்றோர் முழுமையாக விரும்பும் பட்சத்தில் கருக்கலைப்புச் செய்ய சொல்லப்படும். அதுவும் குறித்த காலத்துள் தான் இது சாத்தியம்.

ஆனால் ஒருபோதும் பெற்றோர் விருப்புக்கு இணங்க பிறந்த குழந்தையை அது குறைபாடோடு தான் பிறக்கும் என்று தெரிந்திருந்தும் பெற்ற பிள்ளையை கருணைக்கொலைக்கு பரிந்துரைப்பதில்லை.

கருக்கலைப்புக்கு பரிந்துரைக்கும் போதே பல பெற்றோர் குறிப்பாக குழந்தையை சுமக்கும் பெண்கள்.. மிகவும் துயரோடும் மன அழுத்தத்தோடும் காணப்படுவதோடு.. தற்கொலை உணர்வுக்கும் தூண்டப்படக் கூடும்.. அல்லது அழுது தமது வேதனையை வெளிப்படுத்துவதை கண்டு மனம் நொந்திருக்கிற சந்தர்ப்பங்கள் இருக்கிறது. இது எல்லாம் நாட்டிலும் உள்ள ஒரு பொதுப்பிரச்சனை.

தமிழகம் உட்பட இந்தியாவில்  சும்மா சீரியல்களை எடுத்து சமூகத்துக்கு உதவாத விடயங்களை நாட்கணக்காகக் காட்டுவதைக் காட்டிலும் சீரியல்களை சமூக மற்றும் அறிவியல் அறிவூட்டப் பயன்படுத்துவது கூடிய சமூக விழிப்புணர்வுக்கும் அறிவூட்டலுக்கும் வாய்ப்பளிக்கும். 

Labels: , , ,

பதிந்தது <-குருவிகள்-> at 7:27 pm

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க