Friday, March 05, 2010

டைனாசோர்கள் எப்படி அழிந்து போயின.. ஆதாரங்கள் தேடும் விஞ்ஞானிகள்.இன்று இந்தப் பூமிப்பந்தில் மனிதன் ஆதிக்கம் செலுத்துவது போன்று 65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் பூமியில் ஆதிக்கம் செலுத்திய ராட்சத பல்லி வகைகள் என்று கூறப்படும் டைனாசோர்களும் இதர ராட்சத விலங்குகளும் எப்படி பூண்டோடு பூமிப்பந்தில் இருந்து அழிக்கப்பட்டன என்பது தெளிவான விடை காண முடியாத வினாவாகவே இருந்து வந்துள்ளது.

தற்போது அதற்கு விடை தேடி சான்றுகள் அடிப்படையில் ஒரு திடமான விளக்கத்தை விஞ்ஞானிகள் அளிக்க முன் வந்துள்ளனர்.//பாறைகள் சொல்லும் ஆதாரங்கள்.//

65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் சுமார் 10 தொடக்கம் 15 கிலோமீற்றர்கள் விட்டமுடைய ராட்சத விண்பாறை அல்லது வால்நட்சத்திடம் ஒன்று இன்றைய மெக்சிகோ பகுதியில், துப்பாக்கிச் சன்னம் ஒன்றின் வேகத்தை விட 20 தடவைகள் அதிகரித்த வேகத்தில் மோதி ஜப்பான் நாகசாக்கி, கிரோசிமாவில் அமெரிக்காவால் வீசப்பட்ட அணுகுண்டுகள் வெளிப்படுத்திய சக்தியை விட ஒரு பில்லியன் மடங்கு அதிகரித்த சக்தியை பிறப்பித்ததுடன் பெருமளவு தூசிகளையும் கிழப்பி பூமியை இருட்டி விட்டதால் தான் இந்த டைனாசோர்கள் எனப்படும் ராட்சதப் பல்லிகள் அழிந்து போயிருக்க வேண்டும் என்று விஞ்ஞானிகள் தற்போது திடமாகக் கூறுகின்றனர்.

இந்த கொள்கைக்கு மாற்றுக் கொள்கையாக பூமியில் திடீர் என்று தொடர்ச்சியாக ஏற்பட்டு சுமார் 1.5 மில்லியன் ஆண்டுகளுக்குத் தொடர்ந்த ராட்சத எரிமலை வெடிப்புக்களின் விளைவாக தோன்றிய பெருமளவு பாறைக் குழம்புகள் பூமியெங்கும் பரவி இந்த டைனாசோர்களை அழிந்திருக்கலாம் என்றும் ஒரு சாரார் கூறி வருகின்ற போதிலும்.. தற்போது விண்பாறை ஒன்று பூமியோடு மோதி ஏற்பட்ட தாக்கத்தின் விளைவால் தான் இந்த ராட்சதப் பல்லி இனங்கள் பூமியில் இருந்து கிட்டத்தட்ட ஒரு வருட காலத்துள் முற்றாக அழித்தொழிக்கப்பட்டுள்ளன என்று திடமாக கூற விளைகின்றனர் விஞ்ஞானிகள்.//ராட்சத விண்கல் மோதியதாகக் கருதப்படும் பூமியின் பகுதி.//

எதுஎப்படி இருப்பினும் உண்மை என்பது அறிவியலின் பார்வை முன் கிடைக்கும் சான்றுகளுக்கு அப்பால் கிடைக்காத சான்றுகளுக்குள் கூட புதைந்து இருக்கலாம் என்பதையும் கருத்தில் கொள்வதோடு நாளை மனித இனமும் இந்தப் பூமிப் பந்தில் இருந்து இப்படி துடைத்தழிக்கப்பட நேரலாம் எனபதையும் கவனத்தில் எடுத்து ஆராய்ச்சிகளை தொடர்வதும் பாதுகாப்புக்களை மேற்கொள்வதும் நன்றே. ஆனால் அது மனிதன் முன் இருக்கும் இந்த பரந்த பிரபஞ்சத்தை ஆக்கியுள்ள இயற்கை விட்டுள்ள மிகப் பெரிய சவாலாகவே இருக்கும். சவாலை அறிவியல் கொண்டு முறியடிக்க முடியுமா..??! நிச்சயம் அதைச் செய்ய மனிதன் தொடர்ந்து முயல்வான் என்பது மட்டும் நிதர்சனமான உண்மையாக இன்றிருக்கிறது. அதையே இந்த ஆய்வு விளக்கமும் நமக்கு காட்டி நிற்கிறது.

மேலும் காணொளியுடன் கூடிய மேலதிக செய்தி இங்கு.

Labels: , ,

பதிந்தது <-குருவிகள்-> at 12:04 pm

5 மறுமொழிகள்:

Anonymous Anonymous விளம்பியவை...

டைனோசர்களை மொத்தமாக அழித்த ராட்சத எரி நட்சத்திரம்!

லண்டன்: ராட்சத விலங்கான டைனோசர்களை ஒட்டுமொத்தமாக அழித்தது பூமியைத் தாக்கிய ராட்சத எரிநட்சத்திரம் தான் என்று விஞ்ஞானிகள் குழு ஒன்று தெரிவித்துள்ளது.

பூமியில் முன்பு வலம் வந்து கொண்டிருந்த ராட்சத பாலூட்டிகளான டைனோசர்கள் எப்படி மறைந்தன என்பது தொடர்ந்து மர்மமாகவே இருந்து வருகிறது.

பூமியின் தென் பகுதியில் (இப்போது இந்தியா உள்ள பகுதி) மிகப் பெரிய அளவிலான எரிமலைகள் வெடித்துச் சிதறியதால் டைனோசர்கள் அழி்ந்ததாக ஒரு கருத்தும், எரி நட்சத்திரம் தாக்கியதால்தான் டைனோசர்கள் இறந்ததாக இன்னொரு கருத்தையும் விஞ்ஞானிகள் கொண்டுள்ளனர்.

எரிமலை வெடித்ததாக கூறும் விஞ்ஞானிகள், கிட்டத்தட்ட 1.5 மில்லியன் ஆண்டுகளுக்கு அவை தொடர்ந்து வெடித்துச் சிதறிக் கொண்டிருந்ததாக தெரிவித்தனர்.

இந்த சர்ச்சைக்கு தற்போது 41 விஞ்ஞானிகளைக் கொண்ட குழு ஒன்று தீர்வைக் கூறியுள்ளது. ஐரோப்பா, அமெரிக்கா, மெக்சிகோ, கனடா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த இந்த விஞ்ஞானிகள் குழு சயின்ஸ் இதழில் தனது ஆய்வு முடிவை வெளியிட்டுள்ளது.

கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக இந்தக் குழுவினர் ஆய்வுகள் நடத்தி வந்தனர். தற்போது ஆய்வு முடிவை இக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

அதன்படி, கிட்டத்தட்ட 65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பூமியைத் தாக்கியது ஒரு ராட்சத எரிநட்சத்திரம். இதன் காரணமாக பூமியில் இருந்து வந்த பாதி அளவிலான உயிரினங்கள் கூண்டோடு அழிந்தன. அதில் டைனோசர்களும் ஒன்று.

பூமியைத் தாக்கிய அந்த எரிநட்சத்திரத்தின் அளவு 15 கிலோமீட்டர் அகலம் உடையதாகும். தற்போது மெக்சிகோ உள்ள பகுதி அன்று சிக்கக்ஸிலப் என்று அறியப்பட்டது. அந்த இடத்தில்தான் இந்த எரிகல் வந்து மோதியது.

இதன் காரணமாக பூமிப் பந்தின் பெரும் பகுதியில் பெரும் தீப்பிழம்புகள் தோன்றின. 10 ரிக்டருக்கும் மேலான நிலநடுக்கங்கள் பூமியை சிதறடித்தன. கண்டங்களில் பெருமளவில் நிலமாற்றங்கள் ஏற்பட்டன. இதனால் ராட்சத சுனாமிகள் தோன்றி பூமிப் பரப்பில் பாதியை அழித்து விட்டது.

ஹீரோஷிமாவைத் தாக்கிய அணு குண்டின் சக்தியை விட பல கோடி மடங்கு அதிக அளவிலான வேகத்துடனும், சக்தியுடனும் அந்த ராட்சத எரிநட்சத்திரம் பூமியைத் தாக்கியுள்ளது. இதனால்தான் பூமியே சிதறுண்டு போயுள்ளது.

இந்த தாக்குதலில் பூமியில் இருந்து வந்த உயிரினங்களில் பாதிக்கும் மேலானவை பூண்டோடு அழிந்து போய் விட்டன. அவற்றில் டைனோசர்களும் ஒன்று.

எரிநட்சத்திரம் தாக்கியதால் ஏற்பட்ட பெரும் பிரளயத்தால் பூமியின் பெரும்பாலான பகுதிகளை இருள் சூழ்ந்தது. இதனால் ஏற்பட்ட புதிய சூழலைத் தாக்குப் பிடிக்க முடியாமல்தான் டைனோசர்கள் அழிந்து போயுள்ளன என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வுக் குழுவில் இடம் பெற்றிருந்தவர்களில் ஒருவரான ஜெர்மனி விஞ்ஞானி பீட்டர் ஷூல்ட் கூறுகையில், 65.5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு டைனோசர்கள் அழிந்ததாக நமக்கு தடயங்கள் உள்ளன. இதை வைத்துப் பார்க்கும்போது அப்போது பூமியைத் தாக்கிய எரிநட்சத்திரம்தான் இதற்குக் காரணம் எனத் தெரிய வருகிறது.

மேலும் இந்தியாவில் ஏற்பட்ட பெரும் எரிமலை வெடிப்புகளால் டைனோசர்கள் இறந்ததாக கூற முடியாத அளவுக்கு எங்களது ஆய்வு முடிவுகள் உள்ளன.

டைனோசர்கள் அழிந்த காலத்தில் ஏற்பட்ட பிரளயத்திற்குப் பின்னர்தான் மனிதர்கள் சக்தி வாய்ந்த உயிரினங்களாக பூமியில் உருவெடுத்தனர். எனவே இந்தப் பிரளயம், மனித குல வளர்ச்சிக்கு அடிக்கல்லாக அமைந்தது என்று கூடச் சொல்லலாம் என்றார்.

thatstamil.com

Fri Mar 05, 12:45:00 pm GMT  
Blogger prabhadamu விளம்பியவை...

நல்ல தகவல் நண்பாரே. நான் ஆழ்கடல் களஞ்சித்தியன் பிரபாதாமு.


http://azhkadalkalangiyam.blogspot.com/


இதில் எல்லாம் உள்ள தகவல் அருமை அருமை. உண்மையில் உங்கலை பாராட்டுவதில் பெறுமை அடைகிறேன்.

என் தளத்தில் இதில் இருந்து ஒரு சில தகவல் எடுத்து போட அனுமதி அளித்தால் மகிழ்வேன். கட்டாயம் உங்கள் தளத்தின் பெயர் போட்டு நன்றி என்று சொல்லுவேன்.உங்கள் அனுமதி இருந்தால் என் தளத்தில் பதில் அளித்தால் நான் மகிழ்வேன் நண்பா. நன்றி நண்பா.

Thu Mar 25, 01:40:00 am GMT  
Blogger kuruvikal விளம்பியவை...

prabhadamu, நீங்கள் தாராளமாக இங்குள்ள தகவல்களை மீள்பிரசுரம் செய்யலாம்.

தொடர்பு கொண்டு கேட்டுக்கொண்டமைக்கு நன்றிகள்.

பதிவர் - குருவிகள்.

Fri Mar 26, 02:55:00 pm GMT  
Blogger pathaikal விளம்பியவை...

http://www.thuruvi.com/
உங்கள் தளத்துக்கு இணைப்பு கொடுக்கலாம்

உங்கள் பதிவுகளை இங்கே இடுவதன் மூலம் உங்களை தளம்,blogspot ஆகியவற்றை பிரபல்யப் படுத்துங்கள் .2 வாரத்துக்கு

Thu Jun 10, 12:11:00 pm BST  
Blogger வலையப்பன் விளம்பியவை...

வணக்கம் தோழரே! நான் வலையப்பன். புதிய விடியல் வலைப்பதிவின் வலைபதிவர். தங்கள் வலைப்பதிவில் மேற்பகுதியில் நகரும் எழுத்துகள் வடிமைத்திருப்பது நன்றாக இருக்கிறது. அதேப் போல் எனது வலைப்பதிவில் இணைக்க விருப்பம். அதற்கு நான் என்ன செய்ய வேண்டும் என்பதை அறிய தாருங்கள். உங்கள் வலைப்பதிவின் மேற்புரத்தில் இரண்டு இடங்களில் நகரும் எழுத்துகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. அந்த இரண்டு முறையையும் எப்படி அமைப்பது? அல்லது அதற்கான எச்.டி.எம். கோடுகளை தாருங்கள் நன்றி

Mon Jul 12, 05:51:00 pm BST  

Post a Comment

<<முகப்புக்குச் செல்க