Wednesday, February 05, 2020

கொரானொ வைரஸூக்கு எதிரான வக்சீன் நெருங்குகிறது.

Coronavirus outbreak in China may have infected thousands, estimate scientists
இங்கிலாந்தின் இம்பீரியல் கல்லூரியின் நுண்ணுயிரியல் பிரிவின் பேராசிரியர் ஒருவரின் தகவலின் படி.. நடப்பு உலகப் பாதிப்பை உண்டுபண்ணி வரும் கொரானொ வைரஸிற்கு எதிரான வக்சீன் விரைவில் கண்டறியப்பட்டு பாவனைக்கு வரும் என்று கூறப்படுகிறது.

ஒப்பீட்டளவில் குறுகிய காலத்தில் இதனை சாத்தியப்படுத்த முடியும் என்று நம்பிக்கை வெளியிட்டுள்ளார் இம்பீரியல் கல்லூரியின் பேராசிரியர்.

இந்த வைரஸின் ஆர் என் ஏ யின் பகுதி ஒன்றை.. தசைக்கலங்களுக்குள் செலுத்தி வைரஸினை உடலுக்கு அடையாளம் காட்டும்... வகையிலும் வைரஸிற்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தியை உடலில் உருவாக்கும் வகையிலும்.. இந்த வக்சீன் தயாரிப்பு பொறிமுறை முன்னெடுக்கப்பட்டு வருகிறதாம்.

ஏலவே சீன ஆய்வாளர்கள்.. இந்த வைரஸின் முழு மரபணு அலகுகளையும் கண்டறிந்து பட்டியலிட்டு உள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலதிக தகவல் இங்கு

Labels: , ,

பதிந்தது <-குருவிகள்-> at 8:01 pm | 0மறுமொழிகள் | Back to Main

Thursday, November 14, 2019

செவ்வாயில் ஒக்சிசன்.


Graph

Curiosity selfie

பூமியில் உயிர்வாயுவாக திகழும் ஒக்சிசன்.. செவ்வாயின் வளிமண்டலத்திலும் காணப்படுவதாகவும் குறிப்பாக செவ்வாயின் இளவேனில் காலம் மற்றும் கோடைகாலங்களில் இதன் அளவு குறிப்பிடத்தக்க அளவு வளிமண்டலத்தில் அதிகரிக்க அவதானிக்கப்பட்டுள்ளது.

இந்த இயல்புக்கான காரணங்கள் சரியாக அறியப்படவில்லை ஆயிலும் அங்குள்ள நுண்ணுயிர்களின் பங்களிப்பு இதில் இருக்கக் கூடும் என்ற கருத்து நிராகரிக்கப்படவில்லை.

செவ்வாயின் வளிமண்டலதில் காபனீரொக்சைட் அதிகம் காணப்படுவது இங்கு குறிப்பிடத்தக்கது.

மேலும் தகவல்கள் இங்கு. 

Labels: , , , ,

பதிந்தது <-குருவிகள்-> at 11:05 pm | 0மறுமொழிகள் | Back to Main

Saturday, June 01, 2019

மலேரியா நுளம்புகளை கொல்லும் பங்கசு


Mosquito

மரபணு மாற்று தொழில்நுட்பம் மூலம்.. மலேரியா நோயை உருவாக்கும் நுண் உயிரிகளைக் காவும் நுளம்புகளை அழிக்கவல்ல பங்கசு உருவாக்கப்பட்டிருப்பதாக விஞ்ஞானிகள் அறியத்தந்திருக்கிறார்கள்.

இந்தப் பங்கசு உருவாக்கும் நச்சுச் சுரப்பே இப்படி நுளம்புகளைக் கொல்கிறதாம். இந்தப் பங்கசு.. ஒரு வகை நச்சு வலையை உருவாக்கும் சிலத்தி ஒன்றின் மரபணு புகுத்தப்பட்டு உருவாக்கப்பட்டதாகும்.

மலேரியா நோய் என்பது இப்போதும் மனிதர்களிடத்தில் கணிசமான அளவு மரணத்துக்குக் காரணமாக உள்ளது. இதனை விளைவிக்கும் நுண் உயிரி நுளம்புகள் மூலம் மனிதருக்கு மனிதர் காவப்படுகிறது.

இந்தப் பங்கசு உருவாக்கும் நச்சு 99 சதவீதம் மலேரியாவை காவும் நுளம்புகளைக் கொல்லுமாம். குறிப்பாக பெண் நுளம்புகளை.

மேலதிக தகவல் இங்கு..

Labels: , , , , ,

பதிந்தது <-குருவிகள்-> at 5:58 am | 0மறுமொழிகள் | Back to Main

Tuesday, July 25, 2017

மனித இனம் சீக்கிரம் காணாமல் போய்விடும்.. உலகில் இருந்து - எச்சரிக்கை


Sperm
கடந்த 45 ஆண்டு கால அவதானிப்பு மற்றும் ஆராய்ச்சிகள் மூலம் மனித ஆண்களில் சராசரி விந்தணுக்கள் குறைந்து வருவது அதிர்ச்சி தரும் வேகத்தில் நடக்கிறது என்றும்.. இது நீடித்தால் மனித இனம் இந்தப் பூமியில் இருந்து அருகிவிடும் ஆபத்து நேரிடலாம் என்றும் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

மனித ஆண்களில் சராசரி விந்தணுக்கள் குறைந்து வருவதற்கு அவர்கள் எதிர்கொள்ளும் இரசாயனச் சூழல் மற்றும் சுற்றுச் சூழல் காரணிகள் பெரிதும் பங்களிப்பதாகவும் இது தொடரும் என்றால்.. மேற்படி விளைவை மனித இனம் சந்திக்க நேரிலாம் என்று இந்த எச்சரிக்கை வந்துள்ளது.

குறிப்பாக புகைப்பிடித்தல் மற்றும் உடற்பருமன் இதில் கூடிய செல்வாக்குச் செய்துள்ளதாகச் சொல்லப்படுகிறது.

இந்த ஆய்வில் ஈடுபாடாத விஞ்ஞானிகளும் இந்த எச்சரிக்கையை ஒரு முன்னோடி எச்சரிக்கையாக எடுப்பதில் தவறில்லை என்ற பாங்கில் கருத்து வெளியிட்டுள்ளனர்.

இருந்தாலும் இந்த ஆய்வின் முழு நம்பகத்தன்மை குறித்து சந்தேகங்களும் வெளியிடப்பட்டுள்ளன. காரணம்..  தென் அமெரிக்கா. ஆபிரிக்க.. ஆசிய பிராந்திய ஆண்களில் சராசரி விந்தணுக்குறைவு குறிப்பிடத்தக்க அளவில் அவதானிக்கப்படவில்லை என்பதற்கும் அப்பால்.. இந்த ஆய்வில்.. கலந்து கொண்ட ஆண்களின் தன்மை குறித்தும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. 


Labels: , , , , ,

பதிந்தது <-குருவிகள்-> at 11:04 pm | 0மறுமொழிகள் | Back to Main