Saturday, August 02, 2003

தாய் கர்ப்பமாக உள்ள போது உள்ளெடுக்கும் உணவு வகைகளே தோல், தலை மயிர்களின் நிறம், இதய, நீரிழிவு நோய்களுக்கான அத்திவாரம் இடப்பட ஏதுவாக அமைவதாக எலிகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்று எடுத்துக் காட்டியுள்ளது...! குறிப்பாக vitamin B12, folic acid, choline and betaine.
போன்றவை மயிரின் நிறத்தை தீர்மானிக்கும் ஜீனின்(பரம்பரை அலகு)ஆட்சியை தீர்மானிக்கின்றனவாம் அத்துடன் சில ஜீன்களின் தொழிற்பாடுகளும் உயிர்சத்துக்களின் பிரசன்னத்தின் மூலம் ஆளப்படுவதாகவும் குறைப்பிட்ட உயிர்சத்துக்கள் குறையும் போது ஜீனின் தொழிற்பாடு குறைவடைந்து நீரிழிவு இதய நோய்கள் ஏற்பட குழந்தை தாயின் வயிற்றில் உள்ள போதே தீர்மானிக்கப்படுவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது....! எனினும் இவை இன்னும் மனிதனில் உறுதி செய்யப்படவில்லை என்றாலும் எலிகளின் ஜீன்களின் அமைப்பு,தொழிற்பாடுகள் என்பன மனிதனை பெரிதும் ஒத்தனவாகவே உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது...!

பதிந்தது <-குருவிகள்-> at 10:52 am

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க