Tuesday, July 25, 2017

மனித இனம் சீக்கிரம் காணாமல் போய்விடும்.. உலகில் இருந்து - எச்சரிக்கை


Sperm
கடந்த 45 ஆண்டு கால அவதானிப்பு மற்றும் ஆராய்ச்சிகள் மூலம் மனித ஆண்களில் சராசரி விந்தணுக்கள் குறைந்து வருவது அதிர்ச்சி தரும் வேகத்தில் நடக்கிறது என்றும்.. இது நீடித்தால் மனித இனம் இந்தப் பூமியில் இருந்து அருகிவிடும் ஆபத்து நேரிடலாம் என்றும் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

மனித ஆண்களில் சராசரி விந்தணுக்கள் குறைந்து வருவதற்கு அவர்கள் எதிர்கொள்ளும் இரசாயனச் சூழல் மற்றும் சுற்றுச் சூழல் காரணிகள் பெரிதும் பங்களிப்பதாகவும் இது தொடரும் என்றால்.. மேற்படி விளைவை மனித இனம் சந்திக்க நேரிலாம் என்று இந்த எச்சரிக்கை வந்துள்ளது.

குறிப்பாக புகைப்பிடித்தல் மற்றும் உடற்பருமன் இதில் கூடிய செல்வாக்குச் செய்துள்ளதாகச் சொல்லப்படுகிறது.

இந்த ஆய்வில் ஈடுபாடாத விஞ்ஞானிகளும் இந்த எச்சரிக்கையை ஒரு முன்னோடி எச்சரிக்கையாக எடுப்பதில் தவறில்லை என்ற பாங்கில் கருத்து வெளியிட்டுள்ளனர்.

இருந்தாலும் இந்த ஆய்வின் முழு நம்பகத்தன்மை குறித்து சந்தேகங்களும் வெளியிடப்பட்டுள்ளன. காரணம்..  தென் அமெரிக்கா. ஆபிரிக்க.. ஆசிய பிராந்திய ஆண்களில் சராசரி விந்தணுக்குறைவு குறிப்பிடத்தக்க அளவில் அவதானிக்கப்படவில்லை என்பதற்கும் அப்பால்.. இந்த ஆய்வில்.. கலந்து கொண்ட ஆண்களின் தன்மை குறித்தும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. 


Labels: , , , , ,

பதிந்தது <-குருவிகள்-> at 11:04 pm

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க