Saturday, April 15, 2023

நனோடெக்னாலஜி பிசாசாகுமா.. வரப்பிரசாதமாகுமா..?!


நனோடெக்னாலஜி ஹிந்தியாவில் இப்போது தான் கவர்ச்சிகரமான தலைப்பாகியுள்ளது. மேற்கு நாடுகளில் இது 25 அல்லது 30 ஆண்டுகளுக்கு முன்னரே தொடங்கி விட்டது. இந்த தொழில்நுட்பம் பல இடங்களில் பாவிக்கப்பட்டும் வருகிறது.

ஆனால் சிக்கல் என்ன என்றால்.. பொலித்தீன்.. பிளாஸ்ரிக்.. மைக்குரோபீட்ஸ் (microbeads).. இவை எல்லாம் கண்டுபிடிக்கப்பட்டு எப்படி கவர்ச்சிகரமாக அறிமுகமாகி பின் பாவனைக்கு வந்து இப்போ அவற்றின் பாதக விளைவுகளால்.. அவை பாவனைக்கு தடைசெய்யப்படும் நிலைக்கு வந்திருக்கோ.. அந்த நிலை நனோவுக்கும் வரும்.

ஏனெனில்.. இந்த நனோ துகள்கள் காற்றில் கலந்து அல்லது வேறு வகையில் உடலை அடைந்தால்.. அவற்றின் நீண்ட காலப் பாதிப்பு என்பது பாதகமானதாக இருக்கும்..!

 ஏலவே ஈயத்துகள்களின்.. இரும்புத் துகள்களின் தாக்கம் பல நோய்களுக்கான காரணியாக அமைந்திருப்பது போல்.. இந்த காபன் சார்ந்த நுண் துணிக்கைகளின் பாதிப்பும் போகப் போகத்தான் தெரியும்.

கண்டுபிடிப்பதும் கவர்ச்சியாக்கி பாவிப்பதும் பிரச்சனையல்ல.. ஆனால்.. அவற்றின் பாதகமான விளைவுகளை முன்கூட்டியே அறிவதும்.. அறிவிப்பதும் தான் உண்மையான சமூக அக்கறையுள்ள.. சூழல் பாதுகாப்புக் கருதும்.. அறிவியலாக இருக்க முடியும். 

Labels: , ,

பதிந்தது <-குருவிகள்-> at 2:45 pm

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க