Friday, January 01, 2021

கொவிட் 19 முள்ளுப் பந்து விளையாட்டு - களம் 2

இங்கு கொவிட்-19 தொடர்பில் மக்கள் மத்தியில் இருக்கும் பீதிகளைப் பார்ப்போம். அவற்றில் பல போலியானவை.

கேள்வி பதில் வடிவில்..

1. பி சி ஆர் பரிசோதனை நோகுமா?

நிச்சயமாக நோகக் கூடிய ஒரு பரிசோதனை அல்ல. swab (சுவப்) எடுக்கும் போது..கண்ணாடியில் உங்கள் முகத்தை பார்த்துக் கொண்டு வாயை.. ஆ ஆ என்று திறந்து அடித்தொண்டையில்.. இருந்து மாதிரியை பெற்றுக் கொள்ளலாம். அதேபோல்.. மூக்குத்துவாரத்தில்.. இருந்து என்றால்.. சுவப்பை... அடிவரைக்கும் செலுத்தி மாதிரி எடுக்கனும் என்றில்லை. சுமார் 1.5 சென்ரிமீட்டர்கள் வரை உள்ளே சென்று மூக்குத்துவார சுவரில் உள்ள மாதிரிகளை எடுத்தாலே போதும். இது ஒரு போதும் நோகாது. சிலருக்கு தும்மல் வரலாம். நீங்கள் ஒரு திசுவை வைத்து தும்மலை பிடித்துக் கொண்டு மாதிரிகளை எடுக்கலாம்.

COVID-19 nasal swab test: What it feels like to have one - Chicago Sun-Times

Explained: how five-year-olds should be tested for coronavirus | World news  | The Guardian

ஏலவே சளி உள்ளவர்கள்.. சளியை 'சீறி' திசுவில் எடுத்துவிட்டு மாதிரியை எடுக்க வேண்டும்.

எப்போதும் தும்பல்.. இருமல்.. மற்றும் சளியை பெற்ற திசுக்களை (soft nasal tissue).. இப்படி கிருமி தொற்றழிப்புச் செய்து கொள்வது நல்லம். சாதாரண வாழ்வில் இதனை இயல்பாகக் கடைப்பிடிப்பது தடிமன் (common cold).. மற்றும் புளூ (flu) போன்ற நோய்கள் வருவதைக் கூடக் குறைக்கலாம். குறிப்பாக சிங்கப்பூரில் இந்த நடைமுறை இயல்பில் உண்டு. 

Catch It, Bin It, Kill It Sign

2. கொவிட்-19 தொற்றின் போது சில நோயாளிகளில் அதிக அளவு சளி வெளியேற்றப்பட்டு அது சுவாசப்பைகளில் தடங்கலை ஏற்படுத்தும் போது சுவாசிக்க கஸ்டமாக இருக்கும். இதன் போது என்ன செய்ய வேண்டும்..?!

இதன் போது நீங்கள் தற்காலிக முதலுதவிச் செயற்பாடாக.. ஆவி அடையக் கூடிய சுடுநீரில்.. சிறிதளவு விக்ஸை ( கலந்து.. அந்த ஆவியை உள்ளிளுத்துக் கொள்ளலாம். தமிழில் ஆவி பிடிப்பது என்பார். 

image.jpeg.341d33da9a352d50b57df30d54c8b8d0.jpeg

இதில் மக்கள் தமது வசதிக்கு ஏற்ப முறைகளைக் கையாள்கின்றனர். சிலர் சுடும் நீரில் தேயிலை மற்றும் அக்ஸ் திரவம் சில துளிகள் கலந்தும் பிடிப்பது சுகம் எங்கின்றனர்.

images?q=tbn:ANd9GcSCpW0h8qdiNAsIiN-5UQTufIX_Bk78EokxzVILWYKaDZ0pD-_PM7QPRaQLG9z149DfcAcQnNQF&usqp=CAc

இன்னும் சிலர் கற்பூரத்தையும்.. தேங்காய் எண்ணையையும் மேசைக்கரண்டியில் எடுத்து.. சூடாக்கி.. அந்த ஆவியை சுவாசிப்பது.. மற்றும் நெஞ்சில் பூசிக் கொள்வது தமக்கு சுலபமாக இருக்கு என்றும் கூறுகின்றனர்.

ஆனால் இவை எவையும் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவச் சிகிச்சை முறைகள் அல்ல. அங்கீகரிக்கப்பட்ட முதலுதவிகளும் அல்ல. அதனால்.. இவற்றால் பாதிப்பு அதிகமானால்.. அதற்கும் நோயாளிகளே அதிகம் சிரமப்பட நேரிடும். எனவே இவ்வாறான செயற்பாடுகளைச் செய்ய முன்.. உங்கள் பொது வைத்திய சேவைக்குரிய மருத்துவரை அணுகி ஆலோசனை கேட்பது மிக மிக நல்லது. 

How to apply Vicks VapoRub: all of the ways you mightn't have considered.

இந்த முதலுதவிக்கு.. பயன் கிடைக்காவிடின்.. உடனடியாக மருத்துவ சேவையின் அவசர சேவை.. தொலைபேசி இலக்கங்கள் ஊடாக உதவி கோருவது மிக முக்கியம். காரணம்.. இந்த மூச்சு விடும் சிரம நிலை தொடர்ந்து தீவிரமானால்.. உடலில் ஒக்சிசன் அளவில் வீழ்ச்சி ஏற்பட வாய்ப்புண்டு. அது பிற அங்கங்களின் செயற்பாட்டை பாதிக்கச் செய்து.. பலத்த கேடினை விளைவிக்கும்.

3. எனக்கு மூச்சு விடக் கடினமாக உள்ளது. நெஞ்சில்.. சளி நிறைந்திருப்பதை உணர்கிறேன். ஆனால் வைத்தியசாலைக்குப் போகப் பயமாக உள்ளது.. பெரிய வயர்களை மூக்குக்குள்ளால் தள்ளினமாம். ஆக்கள் சொல்வதைக் கேட்டால்.. மிகவும் பயமாக இருக்குது. என்ன செய்வது..?!

கொவிட் 19 தொற்று தீவிரமடையும் போது உடலும் அதனை எதிர்த்துப் போராடும். அதன் விளைவுகளில் ஒன்று சளி உருவாதல். சிலருக்கு இது அதிக அளவாக அமைந்து விடுவதோடு.. அது சுவாசப் பைகளை அடைந்து கொள்வதாலும்.. சுவாசப் பாதைகளை சூழ்ந்து கொள்வதாலும்.. மூச்சு விடச் சிரமம் ஏற்படுவதோடு.. குருதியில் ஒக்சிசனின் அளவும் குறைய வாய்ப்புள்ளது. 

எனவே மூச்சுவிடச் சிரமம் என்றால்.. உடனடியாக அவசர சேவைகளின் தொலைபேசி எண் ஊடாக.. மருத்துவ உதவி கோருவது அவசியம்.

மருத்துவ மனையில்.. சோதனையின் பின் தேவைக்கு அவசியமான முறையில்.. உங்களுக்கு உடலுக்கு தேவையான ஒக்சிசனை வழங்க உபகரணங்களை உபயோகிப்பார்கள்.

அவை எல்லாமே ஒரு விதமானவை அல்ல. சில மட்டுமே அதிதீவிர நோயாளிகளுக்குரிய வயர்களை மூக்குத்துவாரத்தூடு செலுத்தும் பொறிமுறைகளைக் கொண்டவை. ஆனால்.. மற்றவை நோகாத.. இலகுவான உபகரணங்கள். எனவே அச்சம் தவிர்த்து.. மூச்சுவிடுவதில் சிரமம் என்றால்.. உடனடியாக அவசர சேவை தொலைபேசி இலக்கங்களின் ஊடாக அம்புலன்ஸ் வண்டிகளை அழைத்து.. மருத்துவமனையை அடைதல் மிக மிக நல்லது.

How is coronavirus disease treated in hospital?

உங்களின் உடல் நிலைக்கு ஏற்ப இந்தக் கருவிகள் பயன்படுத்தப்பட்டு தேவையான அளவு ஒக்சிசன் செலுத்தப்படும்.

இதில்.. படி 1 மற்றும் 2 நோவோ.. சிரமமோ அற்றது. இது மூச்சு விடும் சிரமம்.. தீவிரமாக முதலே... மூச்சுவிட கடினம் என்ற அறிகுறி தென்பட்டதும்.. மருத்துவமனையை அடைவதின் ஊடாக நீங்கள் உங்களை சிரமப்படுத்தல் இன்றி சிகிச்சைக்கு உப்படுத்திக் கொள்ளலாம். 

படி 3 , 4, 5 கூடிய சிக்கல் தன்மையின் படி வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. வரிசைப்படுத்தலை மேலே படத்தில் இடமிருந்து வலம் காணலாம்.

படி 3 ஐ விட படி 4 ம் 5 சிக்கல் தன்மை கூடியவை. 

4. கொவிட்-19 வெளிப்புறத் தொற்றகற்றலை.. பேபி வைப் (baby wipes)பை பயன்படுத்தி செய்யலாமா.. உபயோகமா..?!

பதில் இல்லை என்பதுதான்.

பேபி வைப்புக்கு பதிலாக.. அற்ககோல் வைப் பாவிப்பதே சிறந்தது. ஆனால்.. இதனை உடலின் வெளிமேற்பரப்பை/உடலை தூய்மைப்படுத்த பயன்படுத்தக் கூடாது. கைகளை சோப் திரவம் பாவித்து கழுவும் விதிமுறைகளைப் பின்பற்றி கழுவ வேண்டு.. அல்லது hand sanitizer (கைகாப்புத் திரவம்) பாவிப்பது நல்லம். உடலை body wash கொண்டு கழுவுதல் சிறப்பு. 

CHW98002 Antibacterial Alcohol Disinfection Wipes Pack of 70 | Medisanitize

 

5. சில வகை மவுத் வாஸ் (வாய்கழுவித் திரவம்)/ பற்பசை பாவிப்பது கொவிட்-19 தொற்றைக் குறைக்குமா..?!

இது தொடர்பில் சில ஆய்வுகளே செய்யப்பட்டுள்ளன. ஆம்.. சில வகை மவுத் வாஸ் பாவித்து கொப்பளித்து.. அடிக்கடி வாய் கழுவிக் கொள்வது.. / பற்பசை பாவித்து நாளுக்கு இரண்டு தடவைகள் பல் விளக்கிக் கொள்வது.. கொவிட்-19 தொற்றின் அளவைக் குறைக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால்.. இது மருத்துவ ரீதியாக உறுதிப்படுத்தப்படவோ.. அல்லது பரிந்துரைக்கப்படவோ இல்லை.

images?q=tbn:ANd9GcTAdB1UMPaB3QEAzfvaj7qCGGjo-5zTdduck7cNbLp_mg4uVI8cIUwZo7-_HLvsbtgjfu054A8&usqp=CAcimages?q=tbn:ANd9GcRxGZQTriv3kC5ELhtUmeWm9fuOS_2xM2mrvSjFC_v9PkpEiMdgOqPZ7YeOx8804ECCY-O7NQ&usqp=CAc

Covid: Mouthwash 'can kill virus in lab in 30 seconds'

ஆக்கம்: யாழ் இணையம் 

Labels: , , ,

பதிந்தது <-குருவிகள்-> at 1:24 pm

0 மறுமொழிகள்:

Post a comment

<<முகப்புக்குச் செல்க