கொவிட் 19 அல்லது கொரானோ பலருக்கு பதட்டம். சிலருக்கு உயிர்க்கொல்லி. நமக்கு விளையாட்டு.

தினமும் கொவிட் பி சி ஆருடன் (PCR- Polymerase Chain Reaction) காலை தொடங்கி மாலை வரை..
முதலில்.. கோழி உரிப்பது போல கொவிட்டை உரித்தல்.. அல்லது கொழுக்கட்டையை பிய்ப்பது போல் பிய்த்தல்...
கொவிட்டை உரித்து.. இதற்கு எக்ஸ்ராக்சன்.. extraction என்பது. கொவிட் கோதை உடைத்து அதன் உள்ளீட்டில் உள்ள ஆர் என் ஏ (RNA- Ribo Nucleic Acid)யை அதாவது கொழுக்கட்டையை பிச்சு உள்ளீட்டை எடுத்து அதற்குள் உள்ள அவித்த பயறைப் பொறுக்கி உண்பது போல்... தனியாக்குதல்.
இதனை நாம் செய்யத் தேவையில்லை. ஒரு ரோபோவே செய்யும்...
இவர் தான் அவர்.. இவர் இந்த அலுவலை ஒரு மணி நேரத்துக்குள் செய்திடுவார்..

அதன் பின்... பிரித்தெடுத்த கொவிட் ஆர் என் ஏ ( RNA) ஐ.. வைச்சுக் கொண்டு வாய்தான் பார்க்கனும்.. ஏனெனில் ஆர் என் ஏயை அப்படியே பெருக்கி எடுக்க இன்னும் வழிமுறைகள் கண்டுபிடிக்கப்படவில்லை என்றே சொல்லலாம்.. இங்கும் இயற்கை மனிதனை வென்றுவிடுகிறது.. அதனால்.. கில்லாடி மனிதன்.. என்ன செய்கிறான் என்றால்.. ஆர் என் ஏ யை டி என் ஏ.. கொம்பிலிமென்ரரி (Complementary DNA) cDNA ஆக்கி இந்த கொவிட் 19 இன் மரபணுத்தகவல்கள் கொப்பிகளை மில்லியன் கணக்கில் உருவாக்கிக் கொள்கிறான். இந்த ஆர் என் ஏ அல்லது சி டி என் ஏ யோ தொற்றாது.
கொவிட் கொழுக்கட்டையாக இருந்தால் மட்டுமே தொற்றும். அதனை கோது.. உள்ளீடு என்று பிரித்துவிட்டால்.. ஆள் காலி. இதனையே மேலே உள்ள ரோபோ செய்கிறது.
இதன் பின் பிரித்தெடுத்த ஆர் என் ஏயை பயன்படுத்தி.. மேற்சொன்ன சி டி என் ஏ யை உருவாக்கி.. கொப்பி பண்ணி அதில் உள்ள கொவிட் தனித்துவ ஜீன்களை அடையாளம் கண்டு.. கொவிட் தொற்றை அடையாளம் காண வேண்டும்.
இந்த வேலைகளையும் ஒரு ரோபோவே செய்யும்..

அவர் இவர் தான். இவர் தன் தொழிலை ஆட்டம் 1 மற்றும் ஆட்டம் 2 என்று ஆடி முடிப்பார். இதற்கான மொத்த நேரம் 2 மணித்தியாலங்கள்.
இவருக்குள் பல அயிட்டங்கள் வைக்கப்பட்டால் தான் அவர் இந்த வேலையை செய்வார்.. இவரை கணனி கட்டுப்படுத்தும்.. இவருக்குள் இத்தனை அயிட்டங்களை அடக்கனும். இல்லாவிடில் இவருக்குரிய வேலையை இவர் செய்யமாட்டார்.
இதற்குள்.. ஆர் என் ஏ யை சி டி என் ஏ ஆக்கி பல்கிப் பெருகச் செய்யும் அதன் பின்.. பல்கிப் பெருகின சி டி என் ஏ யில்.. கொவிட் 19 ஐ அடையாளம் காட்டக் கூடிய அதற்கு என்றே தனித்துமான அடையாள அறிகுறிகளை கண்டறியச் செய்யச் செய்வது. அதாவது தனித்துவமான மரபணுக்களை (Genes) தெரிவு செய்து அடையாளம் காட்டுதல். கொவிட்டை அடையாளம் காண இரண்டு அல்லது அதற்கு மேலதிகமான.. தனித்துவமான மரபணுக்கள் பாவிக்கப்படுகின்றன.

கொவிட்-19 தெரிவு மரபணுக்களின் தொகையை இந்த வரைபுகள் மூலமாக நமக்கு கணனிகள் கணித்துக் காட்டும். இதில் குறித்த கொவிட் 19 ஜீன் வரைபுகளில் Ct (Cycle Threshold value) அளவீடு..9 தொடங்கி 30 க்குள் அமையின் அதனை கொவிட் 19 தொற்று பாசிட்டிவ் என்று கொள்வார்கள். குறிப்பாக Ct குறைவாக இருப்பின் தொற்று அதிகம்.. கூடியதாக இருப்பின் தொற்றுக் குறைந்து செல்கிறது என்று அர்த்தப்படுத்தப்படும். தொற்றின் மிக ஆரம்பத்திலும் Ct கூடியதாக இருக்கலாம். அதலால் இதனை வாசிப்பதில் கவனமாக இருப்பது அவசியம்.
ஆக இந்த பி சி ஆர் (இங்கு உண்மையில் பாவிக்கப்படுவது.. rRT-PCR (The COVID-19 RT-PCR test is a real-time reverse transcription polymerase chain reaction (rRT-PCR)) ஆகும். மேற்சொன்ன முறையில் இதனைச் செய்து முடிக்க.. கிட்டத்தட்ட 4 மணி நேரங்கள் எடுக்கும். இதனை விட குறுகிய நேரத்தில் செய்யக் கூடிய வழிமுறைகளும் உண்டு. ஆனால்.. இந்த முறையில்.. சென்சிர்ரிவிற்றி -sensitivity அதிகமாகும்.
எனி மாறல்கள் தொடர்பில் பார்ப்போம்..
என்னதான் மாறல் (variant).. தோற்றம் மாறிய கொவிட் என்று உலகம் உங்களை வெருட்டினாலும்.. அதன் சில ஜீன்கள் அப்படியே தனித்துவமாகவே தான் உள்ளன. இந்த மாறல்கள்..கொவிட் 19 இல் வெளித்தள்ளிக் கொண்டிருக்கும்.. ஒட்டும் கிளைகோபுரதத்தில் (Glycoprotein -Spike) தான் மாறல் வருகிறது. அதன் ஒட்டும் தன்மையில் தான் தொற்றும் தன்மை உள்ளது.


கொவிட் 19 வெறும் 30 ஆயிரம் bp (base pairs)தான்.. 30 ஆயிரம் மரபணு அலகுகள் என்று வைச்சுக் கொண்டால்.. இது ஆட்டிப்படைக்கும் மனிதனில் இதே 6.4 பில்லியன் bp கள்.
கொவிட் - 19 எமது உடலுக்குள் போடும் ஆட்டத்தை விளங்கிக் கொண்டாலே.. போதும்.. இவரை மடக்கிற பல வழிகளை கண்டறியலாம்.

எல்லா வைரஸ் போலவும் கொவிட் டும் கொட்டிக்காரன் அல்ல அல்ல சுழியன். எமது உடலுக்குள் நுழைந்து எமது கலங்களில் உள்ள இரசாயனப் பொறிகளை பயன்படுத்தி தன் இனத்தைப் பெருப்பித்துக் கொள்கிற.. திறமை உள்ள சுழியன்.
சரி.. எனி எப்படி கொவிட் இருக்கா இல்லையா என்று சொல்லுறது..
கொவிட் எல்லா கலங்களிலும் தொற்ற முடியாது. அவரின் ஒட்டுந்தன்மையுள்ள முள்ளுத்தொப்பியில் உள்ள முள்ளு ஒட்டக்கூடிய கலங்களை தான் அவர் ஆரம்பித்தில் தாக்குவார். அது எமது சுவாசப்பாதை வழி மென்மையான இழையங்கள்.. அமைந்திருப்பது அவருக்கு இந்தச் செயலைச் செய்ய இலகுவாகிவிட்டது.
எனவே சுவாசப் பாதையில்.. குறிப்பாக உள் மூக்குத்துவாரங்கள்.. அடித்தொண்டைப் பகுதியில் இருந்து பெறப்படும்.. பரிசோதனை மாதிரிகள் அடங்கிய காதுக்குடம்பி போன்ற ஆனால் இதற்கு என்று தயாரித்த மென் குடம்பிகளை (swab) பயன்படுத்தி செய்வார்கள்.

மேலே படத்தில் இருப்பது துரித பரிசோதனை (Rapid test kit or Lateral flow test kit) தொகுதி. இதனை வீட்டிலேயே செய்யலாம். இதில் கொவிட் அன்ரிஜென் (Antigen) இருக்கா என்று அதாவது கொவிட் தொற்றி இருக்கா என்று கண்டுபிடிக்கலாம். இதனை வெறும் 30 நிமிடத்துக்குள் செய்யலாம். ஆனால்.. உண்மையில் 10 நிமிடத்துக்குள் முடிவை சொல்லலாம்.

இதற்கு மேலதிகமாக..

அன்ரிபாடி.. (antibody test) ரெஸ்ட் செய்வது. அதாவது எமது உடலில் கொவிட் -19 க்கு எதிரான எதிர்ப்பு சக்தி இருக்கான்னு கண்டறிதல். இதற்கு சில துளி இரத்த மாதிரிகள் போதும்.

இறுதியாக..
என்னதான் கொவிட் 19 தோடு விளையாடினாலும்.. பாதுக்காப்புக் கவசங்கள் அணிந்து கொண்டு போர்க்களச் சண்டைக்கு போவது போல் தான் போக வேண்டி இருக்குது. காரணம்.. கொவிட் நேரடியாக விளைவிக்கும் பாதிப்பை விட எமது உடல் கொவிட்டுக்கு எதிராக அபரிமிதமாக தொழிற்பட ஆரம்பித்தால் தான்.. எமது உடல் எம்மையே அதிகம் பாதிக்கச் செய்துவிடும். அதனால்.. கொவிட்19 தொற்றுக்கண்டால்.. அச்சம் தவிர்த்து நோயெதிர்ப்பு சக்தி/ நிர்பீடணச் செயற்பாட்டை அதிகரிக்கவல்ல.. உணவுகளை உட்கொள்வதோடு.. தொண்டை.. நாசிப் பகுதியில் இருக்கும் கிருமிகளை கொல்லக் கூடிய அல்லது வெளியேற்றக் கூடிய.. உணவுகளை.. சிகிச்சை முறைகளை முன்னெடுக்கலாம்.
சுவாச அல்லது நாட்பட்ட நீண்ட கால நோயாளிகள்.. நிர்பீடணம் அல்லது நோய் எதிர்ப்புசக்தி.. பலவீனமானவர்கள்.. கொவிட் 19 எதிரான அவர்களின் உடற்தொழிற்பாடு காரணமாக.. பாதிப்பை அதிகம் சந்திக்க வாய்ப்புள்ளது. அவர்கள்.. தேவை உணர்ந்து வைத்திய சேவைகளிடம் உதவி நாட வேண்டும்.
சரி..
எனி தனிமைப்படுத்தல்... முகக்கவசம் அணிதல்.. கைகழுவுதல்.. தனிமனித இடவெளி.. இதெல்லாம்.. தொற்றுக்கான வாய்ப்பை.. குறைக்கும் வழிமுறைகளே தவிர.. இவை தொற்றுக்களை முற்றாக தடுக்காது.
எனி வக்சீனுக்கு (vaccine) வருவோம்..
பெறப்பட்டுள்ள வக்சீன்கள்.. இந்த வைரசின்.. சில ஆர் என் ஏ பகுதிகளை பயன்படுத்தி.. அதனை பிரதிநிதித்துவப்படுத்தும்.. கூறுகளை உருவாக்கி.. பெறப்பட்டதே இந்த வக்சீன்.
ஆனால் வேறு சில வழிமுறைகளிலும் இந்த வக்சீன்கள் பெறப்படலாம்.

இந்த வக்சீனை செலுத்தினால்.. உங்கள் உடல் இந்த வைரசுக்கு எதிரான அன்ரிபாடிகளை உருவாக்கி வைச்சுக் கொள்ளும். ஒருவேளை உடலில் வைரஸ் தொற்று ஏற்பட்டால்.. உடனடியாகவே இந்த அன்ரிபாடிகள் தொழிற்பட ஆரம்பிப்பதால்.. இந்த வைரஸ்கள் உடலுக்குள் புகுந்து பெருகிக் கொள்ள முதலே அழிக்கப்பட்டு விடும். அதனால்.. இதன் தாக்கத்தில் இருந்தும் தப்பித்துக் கொள்ளலாம்.
இந்த வக்சீன்களை எடுப்பதால்.. பின்விளைவுகள் வருமா என்றால்.. பாரிய பின்விளைவுகள் வர வாய்ப்புக்குறைவு. ஆனால்.. தனிப்பட்ட நபர்களின் உடல்நிலைகு ஏற்ப இதனை தெரிவு செய்வது நல்லம். குறிப்பாக சிலருக்கு.. பென்சிலின் அலேர்ஜி (Allergy)/ ஒவ்வாமை இருந்தால்.. எப்படி பென்சிலின் எடுக்க முதல் பரிசோதித்து எடுக்கச் சொல்வார்களோ அப்படி.
இந்த வக்சீன்கள் எமக்கு புதிதல்ல. நாம் பிறந்த காலத்தில் இருந்து பல வக்சீன்கள் எமக்குள் ஊட்டப்பட்டே உள்ளன. சில வக்சீன்கள்.. உடலில் மாறா வடுக்களை ஏற்படுத்தி இருப்பதையும் பார்ப்பீர்கள். அந்தளவுக்கு இது இல்லை.
மேலும்.. குருதிப் பிளாஸ்மா (Blood Plasma) ஏற்றுதல்.. கொவிட் 19 தொற்றுக்கண்டு.. தேறிய 35 வயதுக்கும் மேற்பட்ட ஆண்களின் குருதியில் இருந்து பெறப்படும் பிளாஸ்மாவை பயன்படுத்தி அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கும் கொவிட் நோயாளிகள்.. கொவிட்டை எதிர்த்துப் போராடக் கூடிய அன்ரிபாடிகளை கொடுப்பதுண்டு. ஏலவே இப்படியான வழிமுறைகள் வேறு சில நோய்களுக்கு எதிராகவும் பாவிக்கப்படுவதுண்டு.
சரி.. இத்தோடு.. கொவிட்-19 முள்ளுப்பந்து விளையாடி முடிந்துவிட்டது.
இயன்றவரை எளிமைப்படுத்தி தனித்தமிழில் தர முயன்றிருக்கிறோம். எமது சமூகம்.. இந்த கொவிட் 19 சார்ந்தும்.. அதன் தற்போதைய நிலவரம் குறித்தும் அறிந்து அச்சம் நீக்கி வாழ.
படங்கள் - இணையம்
Labels: corona virus. covid-19, coronovirus, covid-19, UK variant covid-19