Thursday, September 24, 2009

சந்திரனில் தண்ணீர் - சந்திரயான் கண்டுபிடிப்பு.



இந்தியாவின் நிலவுக்கான முதல் விண்கலமான சந்திரயான் -1 அதன் பயணத் திட்டத்தின் ஒரு பகுதியை நிறைவு செய்த நிலையில் பழுதடைந்து போக அது பின்னர் கைவிடப்பட்டது.

இருந்தாலும் அந்தச் சந்திரயானில் பொருத்தப்பட்டிருந்த, அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவுக்குச் சொந்தமான கருவி (remote sensing instrument) நிலவின் மேற்பரப்பில் தண்ணீராலான ஈரலிப்புத் தன்மை இருப்பதை தெளிவாகப் படம் பிடித்து அனுப்பியுள்ளது.

இந்த நீர் இருப்பு சிறிதளவாக இருப்பினும்.. நிலவின் ஒரு கன மீற்றர் அளவுள்ள மண்ணைப் பிழிந்தெடுத்தால் ஒரு லீற்றர் நீரைப் பெற முடியும் என்று கூறுகிறார்கள் அமெரிக்க விஞ்ஞானிகள். அத்துடன் இதில் இருந்து உந்துவாகனங்களில் பயன்படுத்தப்பட்டும் திரவ ஒக்சிசன் மற்றும் ஐதரசனைப் பெற முடியும்.

நிலவின் மேற்பரப்பில் ஈரலிப்புத் தன்மை இருப்பது நாசாவின் நிலவுக்கான அப்பலோ விண்வெளித்திட்டத்தின் கீழ் நிலவில் இருந்து பெறப்பட்ட மண் மாதிரிகளை ஆராய்ந்த போது கண்டுபிடிக்கப்பட்டிருந்த போதும் தற்போது தான் அது திட்டவட்டமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

நிலவில் தண்ணீர் இருப்பதான இந்தக் கண்டுபிடிப்பு எதிர்காலத்தில் நிலவு தொடர்பான மனிதனின் அக்கறையை அதிகரிக்கச் செய்வதோடு விண்வெளி ஆய்வுகளில் நிலவு மனிதன் தங்கி ஆய்வுகளைச் செய்ய உகந்த இடைத்தங்கல் நிலையமாக மாறக் கூடிய வாய்ப்புக்கள் உருவாகியுள்ளது.

இந்த புதிய கண்டுபிடிப்பு இந்திய - அமெரிக்க (நாசா) கூட்டு விண்வெளிச் செயற்பாடுகளையும் ஊக்குவிப்பதாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலதிக தகவல் இங்கு..!

Labels: , , , , , ,

பதிந்தது <-குருவிகள்-> at 9:07 am

2 மறுமொழிகள்:

Blogger கோவி.கண்ணன் விளம்பியவை...

நிலவில் தங்கம் கிடைத்தால் பூமியில் விலைக் குறையலாம்.
:)

Thu Sept 24, 09:54:00 am BST  
Blogger kuruvikal விளம்பியவை...

தமாசா..!! :))

நன்றி கோவி.கண்ணன் தங்கள் நீண்ட நாட்களின் பின்னான வருகைக்கும்.. தமாசான சிந்திக்கக் கூடிய பின்னூட்டலுக்கும்..! :)

Thu Sept 24, 04:19:00 pm BST  

Post a Comment

<<முகப்புக்குச் செல்க