Tuesday, October 11, 2022

மொத்துகை மூலம் விண்கல்லின் பாதையை மாற்றிய நாசா.

அமெரிக்க விண்ணாய்வு நிறுவனமான நாசா கடந்த செப்டம்பர் மாதம் 2022 இல் DART என்ற சிறிய விண்கலம் மூலம் பூமியில் இருந்து 11 மில்லியன் கிலோமீற்றர்களுக்கு அப்பால் சுழன்று கொண்டிருக்கும் 163 மீட்டர்கள் விட்டமுள்ள Dimorphos என்று அழைக்கப்படும் விண்கல்லில் மோதி அதன் சுற்றுப் பாதையை வெற்றிகரமாக மாற்றியுள்ளதாக அறிவித்திருக்கிறது. இந்த மொத்துகையின் பின்னர் ஒரு சிறிய வால்நட்சத்திரம் போன்று விண்தூசிகள் 10,000 கிலோமீட்டர்கள் வரை நீண்டதுவும் படம்பிடிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
எதிர்காலத்தில் பூமி நோக்கி வரக் கூடிய விண்கற்களின் திசையை மாற்றுவதற்கு இந்த மொத்துகை (மோதல்) பரீட்சிப்பு உதவும் என்று நம்பலாம்.
மேலும் செய்திகளுக்கு..

பதிந்தது <-குருவிகள்-> at 9:35 pm

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க