Wednesday, August 06, 2003

கொலம்பிய விண் ஓடத்தின் பேரழிவுக்குப் பின்னர் நாசா தனது விண் ஓடமொன்றை அடுத்த வருடம் (2004) பங்குனித் திங்களில் விண்ணுக்கனுப்பத் திட்டமிட்டுள்ளது...! கொலம்பிய விண் ஓட இழப்பு (சர்வதேச விண் ஆய்வு நிலையம்) ஐ எஸ் எஸ்ஸின் விருத்தி, செயற்பாடுகள் முழுமை பெறுவதை தாமதிக்கச் செய்கிறது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது...!

********************************************

சூரிய காந்த மண்டலத்தில் ஏற்பட்ட மாற்றம் (Shifting) சூரியக் குடும்பத்துள் மாசுத்துகள் பொழிவுகள் நிகழ ஊக்கப்படுத்தியுள்ளதாகவும் ...இது பூமியில் கொஸ்மிக் (Cosmic) மீதிகளின் பொழிவு அதிகம் ஏற்பட வாய்ப்பைத் தரும் என்றும்.... இது ஐஸ் ஏஜ் (ice ages) மற்றும் mass extinctions உடன் தொடர்புபட்டதாக இருக்கலாம் என்றும் ஆய்வாளர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்...அத்துடன் வருடா வருடம் 40,000 தொன் கொஸ்மிக் மீதிகள் விண்ணிலிருந்து பூமிக்குள் படிய விளைகின்றன என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது...!

பதிந்தது <-குருவிகள்-> at 2:48 pm

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க