Sunday, November 13, 2005

உலகின் அதிஷ்டசாலிகளில் ஒருவர் பற்றி..!



பிரித்தானியாவைச் சேர்ந்த Andrew Stimpson, 25 என்பவர் எயிட்ஸ் வைரஸான எச் ஐ வி தொற்றில் இருந்து மருத்துவச் சிகிச்சை இன்றி மீண்டிருப்பதாக பிரித்தானிய மருத்துவ வட்டாராங்களை மேற்கோள் காட்டி செய்திகள் தெரிவிக்கின்றன..!

இவருக்கு 2002 இல் மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பரிசோதனையின் படி எச் ஐ வி இவரது உடலில் தொற்றி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது..! எனினும் மருத்துவ சிகிச்சைகள் இன்றி மன அழுத்தத்துடன் வாழ்ந்து வந்த இவர் தற்போது எச் ஐ வி தொற்றில் இருந்து விடுபட்டிருப்பதாக மருத்துவப் பரிசோதனைகள் கூறுகின்றன..! இது தொடர்பில் இவரிடம் மேலும் மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளன..!

இது இந்தோய் தொடர்பில் மேலும் விளக்கங்களுக்கு உதவலாம் என்று மருத்துவ ஆய்வாளர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்..!

மேலதிக தகவல் இங்கு

பதிந்தது <-குருவிகள்-> at 7:04 am

2 மறுமொழிகள்:

Blogger U.P.Tharsan விளம்பியவை...

அடடா!! மனிதன் இதற்கு பயந்துதான் தன் திருவிளையாடல்களை குறைத்து கொண்டான் எனி ஒருவேளை அதுவும் இல்லையா?{திருவிளையாடல் என்ற சொல்லை பாவித்ததிற்காக சிவாஜி ரசிகர்கள் வழக்குபோடவேண்டாம்.:-)) }

Sun Nov 13, 09:39:00 am GMT  
Anonymous Anonymous விளம்பியவை...

உண்மைதான் தர்சன். இருந்தாலும் எயிட்ஸ் மட்டுமல்ல...இன்னும் பல பாலியல் தொற்று நோய்கள் இருக்கின்றனவே..!

அதுமட்டுமன்றி இது ஓரிவருக்குள் உருவாகும் நிர்பீடணம் சார்ந்தும் வெளிப்பட்டு இருக்கலாம்..! அல்லது மருத்துவப் பரிசோதனைகளின் ஆரம்ப முடிவு தவறானதாலும் நேர்ந்திருக்கலாம்.! எது எப்படியோ உண்மையில் இப்படி நடந்திருந்தால் அது மருத்துவ ரீதியில் முக்கியமான ஒன்றுதான்..!

இதுபோல ஆபிரிக்காவிலும் சிலருக்கு இயற்கையான நிர்பீடணம் எச் ஐ விக்கு எதிராக உருவானது என்று முன்னரும் செய்திகள் வந்தன..! அதற்கு மேற்குலகம் அவ்வளவு முக்கியம் கொடுக்கவில்ல என்பதையும் கவனிக்க வேண்டும்..!

Sun Nov 13, 11:50:00 am GMT  

Post a Comment

<<முகப்புக்குச் செல்க