Friday, July 08, 2005

காலநிலை மாற்றமும் ஜி - 8 நாடுகளின் மாநாடும்..!


சமீபத்திய ஜி - 8 நாடுகளின் உச்சிமாநாட்டில் அடுத்து முக்கிய விசயமாக காலநிலை மாற்றம் குறித்த விவகாரம் பேசப்பட்டுள்ளது.

அமெரிக்கா உட்பட செல்வந்த நாடுகளையும், சீனா, இந்தியா போன்ற அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளையும் ஒன்றாக இணைக்கும் வகையில் ஜி.எட்டு நாடுகளுக்கும், ஏனைய நாடுகளுக்கும் இடையில் ஒரு புதிய பேச்சுவார்த்தைக்கான திட்டம் குறித்து டொனி பிளயர் அறிவித்துள்ளார்.

இது குறித்து பெருமைப்படலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.

புவி வெப்பமடைவதை தாமதப்படுத்தவும், அப்படியே அதற்கு ஒரு தடை போடவதையும் இலக்காகக் கொண்டே இந்த பேச்சுக்கள் அமையும் என்றும் பிளயர் குறிப்பிட்டார்.

அடுத்த நவம்பர் மாதத்தில் நடக்கவுள்ள ஒரு உச்சிமாநாட்டுடன் இது ஆரம்பமாகும்.

புவியை வெப்பமடையச் செய்யும் வாயுக்களை குறைக்க புதிய இலக்குகளையோ அல்லது புதிய கால எல்லையையோ தாம் நிர்ணயிக்கவில்லை என்றும் பிளயர் தெரிவித்தார்.

சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்கள் கோரியது போல் அல்லாமல், காலநிலை மாற்றம் என்பது ஒரு அவசரப் பிரச்சனை அல்ல என்றும் அது ஒரு நீண்ட காலப் பிரச்சினை என்றும் இறுதியாக வெளியான தகவலறிக்கை கூறுகிறது.

தகவல் ஆதாரம் - பிபிசி.தமிழ்

பதிந்தது <-குருவிகள்-> at 11:52 pm

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க