Monday, July 28, 2008

அதிக மன அழுத்தம் ஆண்களில் நீரிழிவு நோயை ஊக்குவிக்கிறது.



மன அமைதியின்மை, மன அழுத்தம் மற்றும் நித்திரையின்மை ஆண்களில் குறிப்பிடத்தக்க அளவுக்கு நீரிழிவு வகை 2 (type 2 diabetes) நோய் ஏற்படுவதை ஊக்குவிப்பதாக ஆய்வுகளில் இருந்து கண்டறியப்பட்டுள்ளது.

மன அழுத்தம்,மன அமைதியின்மை மற்றும் மனச் சிக்கல் உள்ள ஆண்களிடத்தில் பிற ஆண்களை விட 2.2 மடங்கு அதிகமாக இந்த நோய் தாக்கி இருப்பது ஆய்வுகளினூடு தெரிய வந்துள்ளது. இதற்கு ஓமோன்களின் சமனிலைக் குழப்பமும் நடத்தை மாற்றங்களும் அதிகம் காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இவை மட்டுமன்றி வயது, உடற் திணிவுச் சுட்டி, பாரம்பரியம்,புகைப்பிடித்தல், உடற்பயிர்சியின்மை மற்றும் சமூக பொருளாதார நிலை என்பனவும் நீரிழிவு நோய் ஏற்படுவதில் செல்வாக்குச் செய்கின்றன என்பதுவும் இங்கு குறிப்பிடத்தக்க விடயமாகும்.

பெண்களில் மன அழுத்தம், மன அமைதியின்மை, மனச்சிக்கல் இந்த விளைவைக் காண்பிப்பதாக இன்னும் ஆதாரங்கள் கிடைக்கப் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. என்றாலும் பிற காரணிகள் பெண்களிலும் நீரிழிவு நோய் ஏற்படுவதில் துணை போகின்றன என்பது ஏலவே அறியப்பட்டுள்ளது.

இதற்கிடையே மனிதர்களில் மன அழுத்தம், மனச் சிக்கல் மற்றும் மன அமைதியின்மை போன்றன இதய நோய்களை அதிகரிக்கின்றன என்பது உறுதியாகி உள்ள நிலையில் தற்போது அவை மூளை, மனித உடலில் சுரக்கப்படும் ஓமோன்களின் செயற்பாட்டில் செய்யும் செல்வாக்கை பாதிக்கச் செய்கின்றமை அல்லது உணவுப் பழக்கம் மற்றும் பெளதீக உடற்தொழிற்பாட்டிலும் (உடற்பயிற்சி போன்றவை) பாதிப்பை உண்டு பண்ணக் கூடியதாக அமைந்திருக்கின்றமை ஆண்களில் இந்த நிலைக்குக் காரணமாக இருக்கலாம் என்றும் கருத்துத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மைய ஆண்டுகளில் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கையும் அது தாக்கும் வயதெல்லையும் அதிகரித்து வருகின்றமை மருத்துவ உலகில் வியப்புடன் பார்க்கப்படுகின்ற விடயமாக மட்டுமன்றி ஆய்வுக்குரிய விடயமாகவும் இருக்கின்றது.

மேலதிக தகவல்கள் இங்கு.

Labels: , , ,

பதிந்தது <-குருவிகள்-> at 7:33 am

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க