Tuesday, July 29, 2008

அமெரிக்காவின் அதி நவீன லேசர் விமானம்.



அமெரிக்காவின் அதி நவீன 'Laser jumbo' விமானம்.

எதிரி நாட்டு ஏவுகணைகளை பல்வேறு நிலைகளிலும் வைத்து தாக்கி அழித்தொழிக்கும் வகையில் மிகவும் சக்தி வாய்ந்த இரசாயன லேசரை (இரசாயனக் கதிர்ப்புக் கற்றைகள்) பாய்ச்சக் கூடிய நவீன கருவியை அமெரிக்கா கண்டறிந்து அதனை போயிங் 747 விமானத்தில் பொருத்தி, விமானத்தின் மூக்குப் பகுதியில் உள்ள விசேட கட்டுப்பாட்டுக் கருவி மூலம் லேசரை தேவைக்கு ஏற்ப பாய்ச்ச வழிவகை செய்து வைத்திருக்கிறது.



எதிரி நாட்டு ஏவுகணைகளைக் கண்டறிந்து குறிவைக்கும் கதிர்ப்புக் கற்றை துணை கொண்டு இயங்கும் பொறி.

இதில் பயன்படுத்தப்படும் உயர் சக்தி இரசாயன ஒக்சிசன் அயடீன் லேசர் (Chemical Oxygen Iodine Laser) பல ஆயிரக்கணக்கு அலகுள்ள வலுவை உருவாக்கக் கூடியது. அவ்வலுவைப் பயன்படுத்தி எதிரி நாடுகளின் அனைத்து வகை ஏவுகணைகளையும் தாக்கி அழிக்க முடியும் என்று இதனை வடிவமைத்துள்ள அமெரிக்க இராணுவ பொறியியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த அதி நவீன இரசாயன லேசர் விமானத்தைக் கொண்டு எதிரி நாட்டு திரவ எரிபொருளில் இயங்கும் ஏவுகணைகளை அவற்றின் இலக்கில் இருந்து 600 கிலோமீற்றர்களுக்கு அப்பாலும்.. திண்ம எரிபொருள் கொண்டியங்கும் ஏவுகணைகளை அவற்றின் இலக்கில் இருந்து 300 கிலோமீற்றர்களுக்கு அப்பாலும் வைத்து தாக்கி அழிக்க முடியும் என்று தெரிவிக்கப்படுகிறது.



போயிங் 747 விமானத்தின் மூக்குப் பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் லேசர் கதிர்ப்பு அலகு.

ஈரான் மற்றும் வட கொரியாவிடம் இருந்து அமெரிக்காவுக்கும் அதன் நேச நாடுகளுக்கும் எதிராக எழக் கூடிய ஏவுகணை தாக்குதல் அச்சுறுத்தலை சமாளிக்க இது அவசியம் என்று அமெரிக்க பெளதீகத்துறை இராணுவ ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். இருப்பினும் இது ரஷ்சியா, சீனா, இந்தியா , பாகிஸ்தான் போன்ற நாடுகளின் ஏவுகணைகளுக்கும் சவாலாக அமைவதோடு உலகின் இராணுவச் சமநிலையை குழப்பி அமெரிக்காவின் இராணுவ செல்வாக்கையும் பலத்தையும் இந்த தொழில்நுட்பம் இன்னும் அமெரிக்கா பக்கம் உயர்த்தவே வழி செய்யும்..!

மேலதிக தகவல் இங்கு.

Labels: , ,

பதிந்தது <-குருவிகள்-> at 10:52 pm

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க