Tuesday, February 01, 2011

நனோ மற்றும் மருத்துவ தொழில்நுட்பம் எதிர்காலத்தை மாற்றி அமைக்கும் கல்வி.

//Nanotechnology//

நனோ தொழில்நுட்பம் என்பது பென்சில் கரி (கிரபைட்) இன் ஒற்றை காபன் படையை பாய் போல் சுருட்டி உருவாக்கும் மிக நுண்ணிய நனோ (10^-9 m) விட்டம் கொண்ட மின்சாரத்தை மற்றும் வெப்பத்தை கடத்தக் கூடிய உறுதியான பாரம் குறைந்த இழைகளைக் குறிப்பது.



இலத்திரனியல் உலகில் இதன் பாவனை ஏலவே பெரிய பங்காற்ற ஆரம்பித்துவிட்டது. இரசாயனவியலிலும்.. உயிரியலிலும்.. பெளதீகவியலிலும்.. பொருள் வடிவமைப்பு, உருவாக்கதிலும் இவற்றின் பங்களிப்பு இருக்கின்றன.



இன்று உலோகக் கடத்திகள் கொண்டு உருவாக்கப்படும் ஒப்பீட்டளவில் பெரிய இலத்திரனியல் சுற்றுகளை இந்த நனோ கடத்திகள் கொண்டு ஒரு கைவிரல் அளவில் உருவாக்கி விட முடியும். அப்பிள் நிறுவனம்.. இதனை பாவிக்க ஆரம்பித்துவிட்டது.

இத்துறையில் படிப்பது விஞ்ஞானம் சார்ந்த எல்லா துறைகளிலும் பயனளிக்கும். குறிப்பாக இலத்திரனியல் சம்பந்தப்பட்ட தொழில்நிறுவனங்கள் எதிர்காலத்தில் போட்டிபோட்டு அமுல்படுத்தும் அரிய கண்டுபிடிப்புக்களை.. வடிவமைப்புக்களை இந்த தொழில்நுட்பம் உருவாக்கும் என்பது நிச்சயம். அதேவேளை மருத்துவ உலகிலும் இதன் பாவனை அதிகரிப்பதோடு உடலுக்குள் இயங்க வைக்கப்படும் வைத்தியர் கூட இதன் மூலம் உருவாக்கப்படலாம்.



//Medical technology.//

இது ஒரு விரிந்த பாடப்பரப்பு.

இதில் மருத்துவப் பெளதீகவியல் (Medical physics) மருத்துவப் பொறியியல் (Medical Engineering).. மருத்துவ உயிரியல் தொழில்நுட்பம் (bio technology), ஜெனெரிக் பொறியியல் (Genetic engineering) , மருத்துவ உயிரியல் விஞ்ஞானம் (Biomedical science) என்று பிரிவுகள் உண்டு.

மருந்து தயாரிப்பு, வடிவமைப்பு.




மருத்துவ உபகரணங்கள் கண்டுபிடிப்பு வடிவமைப்பு மேம்பாடு இவை தொடர்பான படிப்புகள். (X-ray,, NMR, CT scanner, Ultra sonic, UV therapy, Endoscope, Dental technology and so on)

உயிரியல் பிறப்புரிமை சிகிச்சைகள் மூலம் நோய்களை இல்லாது ஒழித்தல் (ஜீன் தெரபி -Gene therapy)

இப்படி நிறைய 21/22 ம் நூற்றாண்டிற்குரிய பாடப்பரப்புக்கள் இதில் உள்ளன.

இத்துறைகளில் வேலை வாய்ப்பு அதிகம் என்பதை உணர முடிகிறது. ஆனால் இத்துறையில் உள்ளவர்கள் தங்களின் அறிவை எப்போதும் புதுப்பித்துக் கொண்டிருக்க வேண்டும். காரணம்.. விரைவான மாற்றங்களும் வளர்ச்சிகளும் இங்குண்டு. அதற்கு அத்தத்துறையில் இருக்கும் துறை அங்கீகாரம் அளிக்கும் நிறுவனங்களில் (Professional body eg: Institute of Biomedical Science) உறுப்பினராக இருக்க வேண்டும். ஒவ்வொரு நாட்டிலும் இவை இருக்கின்றன. அந்தந்த நாட்டு சட்டங்களுக்கு தேவைகளுக்கு ஏற்ப உங்கள் அறிவை அவை மேம்படுத்த உதவுவதோடு நிபந்தனைகளையும் இடும்.

நான் பார்த்த அளவில் தமிழ் மாணவர்கள் இந்த Professional body களில் அங்கத்துவம் பெறுவது குறைவு. ஆனால் நிறைய உள்நாட்டு வெள்ளைகளும் மற்றவர்களும் அங்கத்துவத்தை பெற்று மேலதிக சலுகைகளையும் பெறுகின்றனர். இந்த வாய்ப்புக்களை பாவிக்க வேண்டும்.



(எவ்வாறு குருதிக் குழாயில் கொலஸ்ரோல் படிவால் ஏற்படும் அடைப்பை சத்திரசிகிச்சை இன்றி தொழில்நுட்ப மேம்பாட்டை பயன்படுத்தி நீக்குதல் என்பதற்கான விளக்கம்.)

மருத்துவ உலகில் (MRCP, FRCP, MRCS, FRCS) இருப்பது போல.. விஞ்ஞானத்தின் இதர பிரிவுகளிலும் இவ்வாறான Professional qualifications மேற்படி நிறுவனங்கள் உங்களின் கல்வித் தகமை.. அனுபவம்.. துறைசார்ந்த அறிவு புதுப்பிப்பு என்பன போன்ற விடயங்களை அளவிட்டு தரும். இவற்றைப் பெறுவது சம்பள உயர்விற்கு மட்டுமன்றி உங்களின் அறிவின் உயர்விற்கும் பயன்பாட்டு விருத்திக்கும் உதவும்.

எனவே நனோ.. மற்றும் மெடிக்கல் தொழில்நுட்பங்களில் உங்கள் நேரத்தை அறிவாற்றலை முதலீடு செய்வது வீணாகாது.

மேலதிக விபரங்கள்:


இணைப்பு 1


இணைப்பு 2

நன்றி யாழ் இணையம்.

Labels: , ,

பதிந்தது <-குருவிகள்-> at 9:48 am

2 மறுமொழிகள்:

Blogger டி,எம்.கெளதம் விளம்பியவை...

பயனுள்ள தகவல்களுக்கு நன்றி

Tue Feb 08, 03:26:00 pm GMT  
Anonymous ktp விளம்பியவை...

i got the required information.thanks

Wed Feb 09, 01:39:00 pm GMT  

Post a Comment

<<முகப்புக்குச் செல்க