Wednesday, January 25, 2012

சக்தி வாய்ந்த சூரிய மின்காந்தப் புயல் பூமியை தாக்குகிறது.



எமது சூரியக் குடும்பத்தைச் சேர்ந்த சூரியனாகிய நட்சத்திரத்தில் நிகழும் அசாதாரண வெடிப்பு விளைவுகளின் பயனாகக் கிளம்பும் அதி சக்தி வாய்ந்த மின்காந்த அலைகளும் துணிக்கைகளும் பூமியையும் அதன் காந்த மண்டலத்தையும் தாக்கும் போது பல்வேறு விளைவுகள் ஏற்படுவதுண்டு.

அந்த வகையில் கடந்த 20-01-2012 அன்று சூரியனில் இருந்து கிளம்பிய சூரியப் புயல் பூமியை 23, 24 ஆகிய தினங்களில் தாக்கியுள்ளதோடு.. அது காவி வந்த ஏற்றமுள்ள துணிக்கைகள்.. பூமியின் காந்தப்புலத்தோடு மோதி.. வாயு மண்டலத்துள் நுழைய எத்தனிக்கையில்.. வடதுருவ வர்ண ஜால வான வேடிக்கைகளையும் பரிசளித்துள்ளது.

இந்தச் சூரியப் புயலின் தாக்கம் வழமையை விட சற்று அதிகமாகவே உணரப்பட்டுள்ளது. இதன் மூலம் மனிதர்களுக்கு தீங்கு விளையாத போதும்.. விண்ணில் எமது பூமியைச் சுற்றி வரும் செயற்கைக் கோள்களுக்கும்... வானில் பறக்கும் விமானங்களுக்கும் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

மேலதிக செய்திகள்.

Labels: , ,

பதிந்தது <-குருவிகள்-> at 12:30 am

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க