Thursday, November 10, 2011

ரஷ்சியாவிற்கு "செவ்வாய் தோஷம்"

Posted Image


விண்வெளியில் மனிதர்கள் சார்ப்பில் கடந்த பல தசாப்தங்களாக சாதனைகளைச் செய்து வரும் ரஷ்சியாவிற்கு.. செவ்வாய்க் கிரகம் நோக்கிய பயணங்கள் அத்தனையும் எதிர்பார்த்த இலக்கை எட்டாமல் தோல்வியில் முடிந்தே வருகிறது.

அதன் தொடர்ச்சி நேற்று (08-11-2011) செவ்வாயின் நிலா (Phobos ) ஒன்றுக்கு விண்கலம் ஒன்றை அனுப்பி அங்கிருந்து பாறை மாதிரிகளை சேகரித்துக் கொண்டு மீண்டும்.. பூமிக்கு திரும்பி வர என அனுப்பி வைக்கப்பட்ட ரஷ்சிய விண்கலம்.. அதன் செவ்வாய் நோக்கிய வழிப் பாதையை தவறவிட்டு.. இப்போ.. பூமியுடனான சுற்றுப் பாதையில் தங்கி நிற்கிறது.

இந்த விண்கலம்.. எதிர்பார்த்த பயணப் பாதையை தவறவிட்டுள்ள போதிலும்.. அதனை சரியான பாதையில் செலுத்த முடியும் என்று ரஷ்சிய விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். இருந்தாலும்.. இந்தப் பயணமும் பெரும்பாலும் தோல்வியிலேயே முடியும் என்றே பலரும் எதிர்வு கூறுகின்றனர்.

சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்குப் பின்னர் வேற்றுக் கிரகம் ஒன்றிற்கு ரஷ்சியா அனுப்பிய முதலாவது விண்கலம் இதுவாகும். இதற்கு முன்னர் சோவியத் காலத்தில் ரஷ்சியா.. சந்திரன்.. வெள்ளிக் கிரகம் என்று பயணித்து.. சூரியக் குடும்பத்தில் உள்ள பூமிக்கு அப்பாலான கிரகங்களை ஆராய்ந்து முன்னிலையை வகித்தது. அதன் பின்னர் அமெரிக்கா விரைந்து அந்த இடத்தை தொடர்ச்சியாக நிரப்பிக் கொண்டு வருகிறது.

மேலதிக விபரங்கள் இங்கு.

பதிந்தது <-குருவிகள்-> at 7:10 am

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க