Saturday, January 14, 2012

உலகின் மிகச் சிறிய தவளை இனம் கண்டுபிடிப்பு.



உலகிலேயே உயிரினப் பன்மைக்கு பெயர் போன இந்தோனீசியாவிற்கு அருகில் உள்ள.. பப்புவா நியூகினியா  ( Papua New Guinea) தீவுகளில்  உலகின் சிறிய இனத் தவளை இனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வெறும் 7 மில்லிமீற்றர் அளவுள்ள இந்த தவளையே முள்ளந்தண்டுள்ள விலங்குகளில் சிறியது என்றும் நம்பப்படுகிறது.

இந்த தவளை இனத்திற்கு Paedophryne amauensis என உயிரியல் பெயரும் சூட்டப்பட்டுள்ளது.

இதனை விட சற்று பெரிய பிறிதொரு இனமும்  (Paedophryne swiftorum) அங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த தவளை இனங்கள் காடுகளின் நிலப்பரப்பில் குப்பை கூழங்களில் மறைந்து வாழ்வதால்.. இவற்றை அவ்வளவு இலகுவாக கண்டுபிடிக்க முடியாது என்று இந்த ஆய்வை நடத்திய அமெரிக்க உயிரியலாளர்கள் கூறுகின்றனர். 

அதேவேளை இதற்கு முன்னர் உலகின் சிறிய இன தவளை இனமான பிரேசில் நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட தவளை இனம் (gold frog -  Brachycephalus didactylus)  இருந்தது.

தவளைகள் அடங்கும் ஈரூடக வாழிகள் பற்றிய சில குறிப்பு:
  • First true amphibians evolved about 250 million years ago.
  • Three orders: frogs (inc. toads), salamanders (inc. newts) and the limbless caecilians.
  • Adapted to many aquatic and terrestrial habitats
  • Present on every continent except Antarctica
  • Many metamorphose from larvae to adults
மேலும் விபரங்களுக்கு:

Labels: , , , ,

பதிந்தது <-குருவிகள்-> at 7:18 am

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க