Tuesday, December 13, 2011

ஹிக்ஸ் போசொன் (கடவுளின் துணிக்கை) பற்றிய அறிவிப்பு இன்று.

Posted Image
எப்படி நாங்கள் வாழும் இந்தப் பூமி உட்பட்ட பல கோடி கிரகங்களும்.. பல கோடி நட்சத்திரங்களும் அடங்கிய.. பல கோடி.. அகிலங்களும்.. கொண்ட.. எண்ணிப் பார்க்க முடியாத பரிமானமுடையதுமான இந்தப் பிரபஞ்சம் தோன்றியது என்று கேட்டால்.. அதற்கு இன்றளவில் சொல்லக் கூடிய காத்திரமான பதில்.. பெரு வெடிப்பு.. அல்லது பிக் பாங் (Big bang).

இந்த பெரு வெடிப்பின் பின் தோன்றிய துணிக்கைகளில் ஒன்றாக கருதப்படும்.. ஹிக்ஸ் பொசொன்..Higgs boson.. தான் அணுக்கள் என்ற கட்டமைப்பினூடு.. திடப்பொருட்கள் உருவாகக் காரணம் என்று சொல்லப்படுகிறது. இதனை பரிசோதனை ரீதியில் நிரூபிக்க என்று..

27 கிலோமீற்றர்கள் சுற்றளவைக் கொண்ட துணிக்கைகள் மோதும் மொத்துகைக் கூடம் (LHC) சுவிஸ் - பிரான்ஸ் எல்லையை ஒட்டி சுமார் 10 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் ஆரம்பிக்கட்டு.. கடந்த சில ஆண்டுகளாக எமது உடல் உட்பட திடப் பொருட்களை (திண்மம்.. திரவம்.. வாயு) ஆக்கியுள்ள.. அணுவின் கருவில் உள்ள நேர் துணிக்கை புரத்தோன்களை மோதவிட்டு ஆராய்ந்ததில் ஒரு கட்டத்தில்.. சுமார் 50 ஆண்டுகளாக கொள்கை அளவில் கண்டறியப்பட்ட ஹிக்ஸ் போசொன் (கடவுளின் துணிக்கை) குறித்தான சில சமிக்ஞைகள் கிடைக்கப்பெற்றதாக விஞ்ஞானிகள் கூறி வந்தனர்.

இன்று (13-12-2011) அது உண்மையில் கண்டறியப்பட்டதா என்ற அறிவிப்பிற்கான நாள் ஆகும். இந்த ஹிக்ஸ் போசொன் ஒருவேளை கண்டறியப்பட்டாலும்.. அது நிச்சயமாக கடவுளின் இருப்பை பற்றி எதுவும் சொல்லப் போறதில்லை. காரணம்.. ஹிக்ஸ் போசொனின் கண்டுபிடிப்பு கூட இன்னும் பல ஆயிரம் கேள்விகளின் ஆரம்பமாக இருக்குமே தவிர.. முடிவாக இருக்காது என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

அறிவியலுக்குத் தான் வயதில்லையே. எதிர்கால சந்ததி.. இந்த அறிவியல் தேடலில்.. தன்னை இணைத்துக் கொள்வதன் மூலம்.. இன்னும் பலவற்றை புதிதாக கண்டறியவும்.. இந்தப் பிரபஞ்சம் பற்றிய மர்மங்கள் துலங்கவும்.. அதன் பயனாக புதிய தேவைகளை மனிதன் நிறைவு செய்யவும் வழிகள் தோன்றலாம்..!

இது ஹிக்ஸ் போசொன் அறிவிப்புக்கான நாள்.. சார்ந்த ஒரு சிறிய குறிப்பு..!

Posted Image

ஹிக்ஸ் எமக்கான ஒரு வழிகாட்டி.. அறிவியலாளர். நாம் தேடல் செய்ய இந்தப் பிரபஞ்சத்தையும் கடந்த பரிமானம் உள்ள விடயங்கள் உள்ளன என்பதை இனங்காட்டியுள்ள அறிவியலாளர்.

ஆதாரங்கள்:

இணைப்பு 1

இணைப்பு 2

Labels: , , ,

பதிந்தது <-குருவிகள்-> at 7:23 am

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க