Thursday, January 26, 2012

வெள்ளிக் கிரகத்தில் உயிரினம்: உரிமை கோருகிறது ரஷ்சியா; நிராகரிக்கிறது அமெரிக்கா.

1982 இல் வெள்ளிக் கிரகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்ட Venus - 13 என்ற சோவியத் கால விண்கலம் எடுத்து அனுப்பிய படங்களை ஆராய்ந்ததில் அங்கு தேள் (scorpion) போன்ற வடிவில் உயிரினம் ஓடித் திரிவது போன்ற தோற்றம் தெரிவது தெரிய வந்துள்ளது. இதனை ரஷ்சிய விஞ்ஞானிகள் கிட்டத்தட்ட 29 ஆண்டுகளுக்குப் பிறகு வெளி உலகிற்குத் தெரியப்படுத்தி உள்ளனர்.

ஆனால் 464 பாகை செல்சியஸ் மேற்பரப்பு வெப்பநிலையுடைய,  வளிமண்டலத்தில் காபனீரொக்சைட்டை அதிகம் கொண்டுள்ள, பூமியை விட 0.9 மடங்கு கூடிய ஈர்ப்பு சக்தி உடைய  சூடான கிரகமான வெள்ளியில் எப்படி ஒரு உயிரினம் வாழ முடியும் என்ற கேள்வியோடு..  குறித்த படத்தில் தோன்றுவது உயிரினமல்ல ரஷ்சிய விண்கலத்தின் உருண்டோடும் பாகமே என்கிறது அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா.

ரஷ்சிய வெள்ளிக்கான விண்கலம் Venus - 13 க்குப் போட்டியாக நாசாவும் Venera 13 மற்றும் Venera 14 ஆகிய விண்கலங்களை வெள்ளிக் கிரகத்தில் தரையிறக்கி ஆய்வுகளை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. அதில் Venera 14 ரஷ்சிய கலம் இறங்கிய இடத்திற்கு சமீபமாக தரையிறங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது. அது எடுத்து அனுப்பிய நாசா வெளியிட்ட படத்தையே மேலே இரண்டாவதாகக் காண்கிறீர்கள்.

மேலதிக செய்திகளும் படங்களும் இங்கு.

Labels: , , , , ,

பதிந்தது <-குருவிகள்-> at 2:51 am

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க