Thursday, November 20, 2003

எமது பூமிக்கு வயது கிட்டத்தட்ட 4.5 பில்லியன் வருடங்கள்....பூமியில் உயிரினங்கள் தோன்றியது சுமார் 3.5 பில்லியன் வருடங்களுக்கு முன்னர்... யுராசிக் பாக் டைனோசோரர்கள் வாழ்ந்தது சுமார் 66 மில்லியன் வருடங்களுக்கு முன்னர்....எனி விடயத்துக்கு வருவோமா...சமீபத்தில் அன்டாட்டிக்கா பகுதியில் நடத்தப்பட்ட ஆய்வொன்றில் இருந்து சுமார் 251 மில்லியன் வருடங்களுக்கு முன்னர் எமது பூமியோடு சுமார் 4.6 பில்லியன் வயதுடைய மிகப்பெரிய விண்பாறை மோதி பூமியில் வாழ்ந்த உயிரினங்களில் கிட்டத்தட்ட 90சதவீதம் அழிந்திருக்கலாம் என்றும் அதன் பின் இன்னுமொரு விண் பாறை மோதலிலேயே டைனோசோரர்கள் அழிந்துள்ளன என்றும் தகவல் வெளியிட்டுள்ளனர்...இதற்கான ஆதாரங்கள் அன்டாட்டிக்காப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட விண் பாறைத்துகளை இரசாயன பகுப்பாய்வுக்கு உட்படுத்திய போது அறியப்பட்டுள்ளது....!
இவ்வாய்வை the University of Rochester சேர்ந்த புவியியற்துறைப் பேராசிரியர் Asish R. Basu செய்துள்ளார்.....!

மேலதிக விபரங்களுக்கு இங்கு அழுத்தவும்..

பதிந்தது <-குருவிகள்-> at 9:33 pm

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க