Sunday, November 09, 2003

எமது உடலை ஆக்கும் தகவலை எமது அப்பா அம்மாவிடம் இருந்து கொண்டுவரும் நிறமூர்த்தங்கள்(Chromosomes) அடிப்படையில் DNA எனும் மாமூலக்கூற்றுக் கட்டமைப்பு மற்றும் புரதம் கொண்டு ஆனவை...இந்த DNA இல் தான் ஜீன்கள் இருக்கின்றன..அந்த ஜீன்களின் எண்ணிக்கை மனிதனில் 30,000 (30,ஆயிரம்) ஆகும்....!
சரி... DNA யில் உள்ள ஜீன்கள் எப்படித் தாம் கொண்டுள்ள தகவலைக் கொண்டு கலத்தை (உடலை ஆக்கும் அடிப்படை அலகு) ஆக்குகின்றன... இயக்குகின்றன...ஆம் அதற்குத்தேவை புரதங்கள் எனும் மற்றுமொரு மாமூலக்கூறு...அவைதான் எமது உடலை ஆக்கும் கலத்தை ஆக்குகின்றன இயக்குகின்றன...DNAயில் உள்ள தகவலை சரியாக பெற்று உடலை இயக்குகின்றன....மனிதனில் உள்ள 30,000 ஜீன்களினதும் தகவல்களைக் கொண்டு எமதுடலை ஆக்கி இயக்க 250,000 புரதங்கள் தேவை...அதுமட்டுமல்ல அவை தமக்கிடையே பல வழிகளில் தொடர்புகளை ஏற்படுத்தி பிரத்தியேகத் தகவல்களையும் பரிமாறிக்கொள்கின்றன....மனிதனில் எல்லா புரதங்களும் இன்னும் அடையாளம் காணப்படவில்லை ஆனால் பழ ஈ (Drosophila melanogaster ) என்று ஒரு பூச்சியில் அது கொண்டுள்ள கிட்டத்தட்ட அனைத்துப் புரதங்களையும் (7,000) விஞ்ஞானிகள் இனம் கண்டுள்ளனர்....இது எதிர்காலத்தில் உயிரியல் விஞ்ஞானம் அதிநவீன கணணிகளை ஆக்க வழி செய்யும் என்று நாம் கருதுகிறோம்...அது மட்டுமல்ல மருத்துவரீதியிலும் உயிரியல் விஞ்ஞான ரீதியிலும் பல நோய்களுக்கான மருந்துகளையும் கண்டுபிடிக்க இவை உதவும் என்பதும் திண்ணம்...! இன்னும் பல அதிசயங்கள் நிகழவும் இவை வழி செய்யும்....!

மேலதிக தகவலுக்கு இங்கு அழுத்திப் பார்க்கவும்...ஆங்கிலச் செய்தி...

பதிந்தது <-குருவிகள்-> at 6:54 pm

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க