Thursday, December 09, 2004

அருகி வரும் புலிகளில் ஓர் அற்புதம்...!



நவீன மரபணு ரீதியான உயிரியல் பாகுபாட்டின் கீழ் புதிய இன புலிகள் இனங்காணப்பட்டுள்ளன...!

உலகில் கிழக்கு ரஷ்சியா சீனா இந்தியா தென் கிழக்கு ஆசிய நாடுகளில் வாழும் பெரிய வகைப் பூனைகளுக்குள் அடங்கும் புலிகளின் மரபணுக்கள் (டி என் ஏ) பெறப்பட்டு நடத்தப்பட்ட ஆய்வில் இருந்தே இந்த புதிய இனப்புலிகள் வேறுபடுத்தப்பட்டுள்ளன...! இவை பழைய பாகுபாட்டின் அடிப்படையில் முன்னர் வேறொரு பிரிவில் இடப்பட்டிருந்தன....! இப்போ இந்த பாகுபாட்டைச் செய்தவரின் பெயரின் அடிப்படையில் இப்புதிய புலிகள் வர்க்கம் உப இனப் பிரிவாக Panthera tigris jacksoni இனுள் இடப்பட்டுள்ளன.

கல இழைமணி மரபணுப் பாகுபாட்டின் கீழ் சுமார் 72,000 ஆண்டுகள் தொடக்கம் 108,000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்ததாக கருதப்படும் பொதுவான ஆதியான மூதாதையர்களில் இருந்தே இந்தப் புலிகள் தோன்றி இருக்க வேண்டும் என்றும் அனுமானிக்கப்பட்டுள்ளது....!

இதற்கிடையில் வருத்தம் தரும் செய்தி ஒன்றும் இதனுடன் சேர்ந்து வந்திருக்கிறது.... உலகில் 1900 ஆண்டில் கிட்டத்தட்ட 100,000 இருந்த புலிகளின் எண்ணிக்கை தற்போது சுமார் 7000 ஆகக் குறைந்துள்ளதாகவும் இதற்கு அவற்றின் வாழ்விட அழிப்பு, வேட்டையாடல் என்பன முக்கிய காரணிகளாக உள்ளன என்றும் செய்திகள் கூறுகின்றன....!


மேலதிக தகவல் ஆங்கிலம்...bbc.com

பதிந்தது <-குருவிகள்-> at 1:21 am

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க