Wednesday, November 24, 2004

உலகின் மிகச் சிறிய பரிசோதனைக் குழாய்...!



பச்சையாக இருப்பது பரிசோதனைக் குழாய் உள்ளே இருப்பது தாக்கமுறும் மூலக் கூறுகள்...! இதைப் பார்வையிட இலத்திரன் நுணுக்குக்காட்டி (Electron microscope) அவசியம்...!


பென்சில் கரியின் (graphite) ஒரு அணு பருமனுடைய படைகளைக் (sheets) கொண்டு உருவாக்கப்பட்ட காபன் பிறதிருப்பமான நனோ ரியூப்கள் கொண்டு ஆக்கப்பட்ட மிக நுண்ணிய இரசாயனக் குழாய்களில் நிகழத்தப்பட்ட இரசாயனத் தாக்கத்தின் வாயிலாக கிளை கொண்ட நீண்ட மூலக்கூறுகளுக்குப் பதில் நீண்ட சங்கிலி அமைப்பான மூலக்கூறுகளை உருவாக்கி பிரித்தானிய ஒக்ஸ்பேட் மற்றும் நொட்டின்காம் பல்கலைக்கழக இரசாயன ஆராய்ச்சியாளர்கள் உலக சாதனை படைத்துள்ளனர்...!

இத் தொழில்நுட்பத்தை எதிர்காலத்தில் தொழில்துறையில் புகுத்தி குறைந்த செலவில் பயன்மிக்க இரசாயன விளைவுகளை (polymers) பெறமுடியும் என்று கருத்துக் கூறப்பட்டுள்ளது...!

இந்த பரிசோதனைக் குழாயின் (test tube) பருமன் என்ன தெரியுமா...

உள்விட்டம் (inner diameter) 1.2 X 10^-9 m (nano) ரும் நீளம் (length) 2 x 10^-6 m (micro) ரும் ஆகும்...!

கனவளவு (volume) கிட்டத்தட்ட 2 ஜிப்ரோ லீற்றர்கள் (zeptolitres) ... பாவனையில் உள்ள கனவளவுக்கான இரண்டாவது சிறிய அலகு...!

For more details

பதிந்தது <-குருவிகள்-> at 6:23 pm

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க