Monday, October 13, 2008

அனுமான் வடிவ மனிதன் "ஆடு" ஆகினான்.



yeti மாதிரி வடிவம் - சித்திரம்.

இந்தியாவின் வட-கிழக்கு மாநிலமான மேகாலயாவில் (Meghalaya) காட்டுப்புறப் பகுதி ஒன்றில் கண்டெடுக்கப்பட்டு அனுமான் வடிவ மனிதன் அல்லது குரங்கு-மனிதன் அல்லது yeti இன் உரோமமாக (மயிர்) இருக்கலாம் என்று கருதப்பட்ட மாதிரி உண்மையில் இமாலயப் பகுதியில் வாழும் ஆட்டினது (goral goat ) என்று அமெரிக்காவில் செய்யப்பட்ட மரபணுப் பகுப்பாய்வில் இருந்து கண்டறியப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும் yeti இன் இருப்புப் பற்றி திடமாக நம்புபவர்கள் இது தமது நம்பிக்கையை நிரூபிக்கக் கிடைத்த ஆதாரத்திற்கான ஒரு பின்னடைவே அன்றி தாம் இன்னும் yeti பற்றிய நம்பிக்கையை முழுமையாகக் கைவிடவில்லை என்று தெரிவித்துள்ளதுடன் எதிர்காலத்தில் yeti பற்றிய மேலும் வலுவான ஆதாரங்களை திரட்ட வாய்ப்புக் கிடைக்கும் என்றும் நம்புகின்றனர்.



இமாலயப் பகுதியில் வாழும் goral ஆடு.

ஏலவே மேற்படி yeti இன் உரோமம் என்று கருதப்பட்ட மாதிரி இங்கிலாந்தில் நுணுக்குக்காட்டி பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டு, பின் தெளிவான முடிவுகளுக்காக அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

மேலதிக தகவல் இங்கு.

Labels: , ,

பதிந்தது <-குருவிகள்-> at 11:05 pm

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க