Monday, March 16, 2009

நனோ தொழில்நுட்பம் மூலம் புற்றுநோய்க்கு சிகிச்சை.



சத்திர சிகிச்சை மூலமாகக் கூட குணப்படுத்த முடியாத புற்றுநோய் தாக்கத்தை நனோ தொழில்நுட்பத்தை பாவித்து குணப்படுத்த வாய்ப்புள்ளது என்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

எலிகளில் வெற்றியளித்துள்ள இந்த பரிசோதனையின் போது புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள கலங்களுக்குள் நனோ மூலக்கூறுகள் மூலம் குறிப்பிட்ட சில மரபணு அலகுகளை கட்டி வைத்து செலுத்தி அவை உருவாக்கும் புரதங்கள் கொண்டு மேற்படி புற்றுநோய் பாதித்த உடற்கலங்களை அழிப்பதே இந்த தொழில்நுட்பத்தின் நோக்கமாகும்.

இத்தொழில்நுட்பம் புற்றுநோய்க்கான சிகிச்சை முறையில் ஒரு புரட்சிகர மாற்றத்தை உருவாக்கலாம் என்று கருதப்பட்டாலும் நனோ தொழில்நுட்பம் மூலம் செலுத்தப்படும் மரபணு அலகுகள் புற்றுநோய் கலங்களுக்குள் எடுக்கப்பட்டு அவை புரதங்களை ஆக்கத் தூண்டப்படுதல் என்பது இன்னும் சவால் நிறைந்த விடயமாகவே அமைந்திருக்கிறது.

எலிகளில் இப்பரிசோதனை வெற்றிகரமாக முடிந்துள்ள நிலையில் மனிதர்களிலும் இது மிக விரைவில் (இரண்டு ஆண்டுகளில்) பரிசோதித்துப் பார்க்கப்பட உள்ளது.

இந்தச் சிகிச்சை முறையால் புற்றுநோயால் பாதிக்கப்படாத கலங்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்பது மிக முன்னேற்றகரமான விடயமாகும். நடைமுறையில் உள்ள பாரம்பரியமாக வழங்கப்பட்டு வரும் புற்றுநோய்க்கான சிகிச்சை முறைகளில் பக்க விளைவுகள் என்பதும் சாதாரண உடற்கலங்கள் பாதிக்கப்படுவதும் முற்றாக தவிர்க்கப்பட முடியாத நிலையே இருந்து வருகிறது.

மேலதிக தகவல் இங்கு.

Labels: , ,

பதிந்தது <-குருவிகள்-> at 6:57 am

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க