Monday, June 01, 2009

புதிய தங்காளி மாத்திரை இதய நோயை குணப்படுத்தும் - ஆய்வு



தக்காளியில் இருந்து தயாரிக்கப்பட்ட மாத்திரையான Ateronon இதய நோய்க்கு முக்கிய காரணியான இருக்கும் கெட்ட கொலஸ்ரோலின் அளவை குருதியில் கட்டுப்படுத்தி அந்நோய் மற்றும் மூளையுடன் சம்பந்தப்பட்டு ஏற்படும் பக்கவாதம் போன்ற நோய்களை கட்டுப்படுத்த உதவுவதாக கண்டறிந்துள்ளனர்.

தக்காளியின் தோலில் அதன் செந்நிறத்துக்கு காரணமாக இருக்கும் lycopene என்ற வேதியற் பொருள் கெட்ட LDL என்ற கொலஸ்ரோலை உடற்கலங்களுக்கு அதிக அளவில் காவும் கூறை கட்டுப்படுத்தி அதன் மூலம் உடலில் கொலஸ்ரோல் பெருகாமல் தடுப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இந்த மாத்திரை தற்போது கொலஸ்ரோலை கட்டுப்படுத்த பயன்படுத்தப்பட்டு வரும் statin ஐ விட அதிக அளவு வினைத்திறன் உள்ளதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமும் உள்ளெடுக்கப்பட்டக் கூடியதாக இருக்கும் இந்த மாத்திரை இன்னும் பல சுற்று சோதனைகளின் பின்னே தான் பாவனைக்கு அனுமதிக்கப்படும் என்று கூறும் ஆய்வாளர்கள் இம்மாத்திரை தக்காளியில் இருந்து பெறப்பட்ட கூறில் இருந்து அல்லது இயற்கையில் இருந்து பெறப்பட்ட ஆனால் மறுசீரமைப்பட்ட வேதியற் கூறைக் கொண்டும் தயாரிக்கப்படலாம் என்பதால் இந்தச் சோதனைகள் அவசியம் எங்கின்றனர்.

உலகில் மனிதரிடத்தில் அதிக மரணங்களை ஏற்படுத்தும் நோய்களில் இதய நோய்களும் உள்ளடங்குகின்றன என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

மேலதிக தகவல் இங்கு.

Labels: , , , ,

பதிந்தது <-குருவிகள்-> at 4:04 pm

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க