Tuesday, May 05, 2009

கருத்தடையில் இருந்து எனிப் பெண்களுக்கு விடுதலை.



உலக சனத்தொகை கட்டுப்பாடின்றி பெருகி வரும் இன்றைய நிலையில் குடும்பக்கட்டுப்பாடு என்றால் பெண்களையே அதிகம் குறிவைக்கின்றனர்.

ஆண்களும் குடும்பக் கட்டுப்பாட்டு சத்திர சிகிச்சை மற்றும் ஆணுறைகளைப் பாவித்தல் போன்ற வழிகளில் குடும்பக்கட்டுப்பாட்டை மேற்கொள்ள முடியும். இருந்தாலும் பெண்களே கருத்தடை மாத்திரைகளை உள்ளெடுத்தல் உட்பட்ட பல்வேறுபட்ட குடும்பக்கட்டுப்பாட்டு வழிமுறைகளை கையாளத் தூண்டப்படுகின்றனர்.

ஆனால் தற்போது ஆண்கள் மாதாந்தம் ரெஸ்ரொஸ்ரெறோன் (testosterone )ஊசியைப் போட்டுக் கொண்டாலே போதும் பெண்கள் குழந்தை உருவாகிவிடுமோ என்ற கவலை இன்றி தாம்பத்தியத்தில் ஈடுபடலாம் என்ற நிலை தோன்றியுள்ளது.

மேற்குறிப்பிட்ட ஊசி மூலம் குழந்தைகள் உருவாகாத வகைக்கு ஆண்களில் விந்து உற்பத்தி குறைக்கப்படுவதால் அவ்வாறான ஆண்களோடு தாம்பத்தியம் வைக்கும் பெண்களுக்கு குழந்தை உருவாக வாய்ப்பு 100க்கு 1 என்ற விகிதத்திலேயே அமைகின்றது எங்கின்றனர் இந்த ஆண்களுக்கான குடும்பக்கட்டுப்பாட்டு ஓமோன் ஊசியைக் கண்டுபிடித்து பரிசோதனை ரீதியில் செயற்படுத்தி வரும் சீன ஆய்வாளர்கள்.

இந்த ஊசி மருந்து இன்னும் பல வகை பரிசோதனைக்களுக்கு உட்படுத்தப்பட்டு அவற்றின் சாதக மற்றும் பாதக விளைவுகள் நன்கு ஆராயப்பட்ட பின்னே பாவனைக்கு விடப்பட முடியும் எங்கின்றார்கள் இதே ஆய்வாளர்கள்.

அதுமட்டுமன்றி இந்த ஊசி மருந்தைப் போட்டுக் கொள்ளும் ஆண் அதனை நிறுத்தி 6 மாதங்களின் பின் தான் வழமையான அளவு விந்தணுக்களை உற்பத்தி செய்யும் இயல்பைப் பெற முடியும் என்றும் கூறப்படுகிறது

எதுஎப்படியோ இந்த ஊசியை விட பெண்களில் மேற்கொள்ளும் மாத்திரைகள் மூலமான குடும்பக்கட்டுப்பாட்டு வழிமுறைகளே அதிகம் வெற்றிகரமாக அமைகின்றன என்று கூறும் ஆய்வாளர்கள் இந்த ஆண்களுக்கான ஊசி முறைமூலம் எயிட்ஸ் போன்ற பால்வினை நோய்கள் தொற்றுவதைத் தடுக்க முடியாது என்றும் பரிந்துரைக்கின்றனர்.

மேலதிக தகவல் இங்கு.

Labels: , , , ,

பதிந்தது <-குருவிகள்-> at 1:49 pm

1 மறுமொழிகள்:

Blogger வினோத்குமார் விளம்பியவை...

good information ..thanks a lot

Wed May 06, 06:17:00 am BST  

Post a Comment

<<முகப்புக்குச் செல்க