Saturday, June 06, 2009

நாளும் வைன்,பூடு மற்றும் சாக்கிலேட் சாப்பிட்டால் இதய நோயை குறைக்கலாம்.



தினமும் ஒரு குறிப்பிட்ட அளவு உள்ள சில வகை உணவுகளை கூட்டாக (கூட்டுணவாக ( polymeal ) உண்டு வந்தால் இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்படுவதை பெருமளவு ( கொள்கை ரீதியாக - theoretically 76% - 80%) குறைக்கும் அதேவேளை 50 வயதுக்கு மேற்பட்டோரில் வாழ்க்கைக் காலத்தை குறிப்பிடத்தக்க அளவு அதிகரிக்கும் என்று ஒரு ஆய்வுக்கட்டுரை தெரிவிக்கிறது.

அதுமட்டுமன்றி குறிப்பிட்ட சில உணவுக் கூறுகளை தனித்தனியே உண்டு வந்தாலும் கூட குறிப்பிடத்தக்க அளவு இதய நோய்களைக் குறைக்க முடியும் என்கிறது மேற்படி மருத்துவ ஆய்வுக்கட்டுரை.

ஆண்களில் கீழே அட்டவணையில் காட்டியபடி உணவுவகைகளை கூட்டுணவாக உட்கெண்டு வந்தால் வாழ்க்கைக்காலம் சராசரியாக 6.6 ஆண்டுகள் (கொள்கை ரீதியாக) அதிகரிக்கலாம் என்றும் கூறுகிறது கட்டுரை. அதேவேளை அதுவே பெண்களில் 4.8 ஆண்டுகளாக அமைகிறது.



இந்த கூட்டுணவில் உள்ளடங்கும் உணவு வகைகளாக வைன் (சிவப்பு),கருநிற சாக்கிலேட், மீன், மரக்கறி வகைகள் மற்றும் பழங்கள், பூடு மற்றும் அல்மண்ட் (Almond) போன்றவை அடங்குகின்றன.

வைன் சாப்பிடச் சொல்லுறாங்களே என்று "பெருங் குடிமக்கள்" பலர் அதிகம் மகிழ்வுறக் கூடும். மதுபானத்தை விரும்பாதவர்கள் வெறுக்கவும் கூடும். ஆனால் இங்கு கவனிக்க வேண்டியது என்னவென்றால் தினமும் 150 மில்லிலீற்றர்கள் மட்டுமே வைன் சாப்பிட வேண்டும். உண்மையில் இந்த அளவு வைன் என்பது ஒரு சில வைன் சாக்கிலேட்டுக்களில் உள்ளடக்கப்பட்டு விடும். எனவே மேற்படி அளவு வைனை உள்ளெடுப்பதால் பிற பாதிப்புக்கள் ஏற்பட வாய்ப்பில்லை என்பதையும் கவனித்தல் நன்று.

எனினும் இந்தக் கட்டுரையில் உள்ளடங்கியுள்ள ஆய்வுத் தகவல்கள் இன்னும் பல வகையில் பரீட்சிக்கப்பட வேண்டி இருப்பதுடன் சில வகை நோய்களுடன் வாழ்பவர்கள் அல்லது குறைபாடுகளோடு வாழ்பவர்கள் மதுபானத்தை சிறிய அளவில் என்றாலும் மருத்துவ ஆலோசனை இன்றி அருந்துவது ஆபத்தானது ஆகும்.

Days of Wine and Chocolate

மேலதிக தகவலுக்கும் ஆதாரத்துக்கும் இங்கு அழுத்துங்கள்.

சிறிதளவில் வைன் சாப்பிடுதலின் நன்மை பற்றிய இன்னொரு கட்டுரை.

-----------------
(இப்பதிவு எமது வலைத்தளத்தின் 500வது இடுகையாகும்.)

Labels: , , ,

பதிந்தது <-குருவிகள்-> at 8:54 am

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க