Friday, June 12, 2009

கைகளில் ரேகைகள் ஏன்..?!



கைகளில் விரல்களில் ரேகைகள் (Fingerprint) இருப்பது எதற்கு..?! சாத்திரம் (ஜோசியம்) பார்க்கவா.. பலன் பார்க்கவா. நிச்சயமாக இல்லை. அது பணம் பார்ப்பவர்களின் ஏமாற்று வேலை. ஆனால் உயிரியல் ஆய்வாளர்கள் இவை ஏன் இருக்கின்றன என்று ஆராய வெளிக்கிட்டு இருந்த கொள்கையையும் மறுதலிக்கும் நிலைக்குச் சென்று தாமும் சரியான விடை தெரியாமல் குழம்பிப் போயுள்ளனர்.

இவ்வளவு காலமும் கைகளில் கால்களில் இருக்கும் ரேகைகள் உராய்வை அதிகரித்து வலுவான பிடிப்புக்கு உதவுவதாக சொல்லப்பட்டு வந்தது. ஆனால் சமீபத்திய ஆய்வொன்று அதனை மறுதலிப்பதுடன் இந்த ரேகைகள் தோலின் தொடுபரப்பை கணிசமான அளவு குறைப்பதாகவும் இதனாலேயே சில சமயங்களில் பிடிக்கும் பொருட்கள் கூட தவற விடப்பட சந்தர்ப்பம் ஏற்படுவதாகவும் கண்டறிந்துள்ளனர்.

அப்படி என்றால் இந்த ரேகைகளின் பயன்தான் என்ன..?! ஆராய்ந்தால் விடை கிடைக்காமலா போகும். தொடர்ந்து முயற்சிப்போம்..!


மேலதிக தகவல் இங்கு.

Labels: , ,

பதிந்தது <-குருவிகள்-> at 11:23 am

2 மறுமொழிகள்:

Anonymous nila விளம்பியவை...

நீங்கள் கூறுவது சரிதான்.. கை ரேகைகளுக்கும் விஞ்ஞானத்துக்கும் சம்பந்தம் உண்டு.... ஆராய்ச்சியாளர்கள் இதை dermatoglyphics என்பார்கள்... அதாவது... கை ரேகைகளைக் கொண்டு ஒருவருக்கு வரக்கூடிய நோயைப் பற்றி தெரிந்து கொள்ளலாம்... மேலும் ஜீன்கள் சம்பந்தப்பட்ட மரபு வழி நோய்களையும் கண்டறியலாம்....

Fri Jun 12, 08:44:00 pm BST  
Blogger kuruvikal விளம்பியவை...

நன்றி நிலா உங்கள் கருத்தையும் பகிர்ந்து கொண்டதற்கு.

Fri Jun 12, 10:08:00 pm BST  

Post a Comment

<<முகப்புக்குச் செல்க