Friday, December 21, 2012

கழுகு ஒன்று.. குழந்தையைக் கவ்வும் காட்சி...



12 மணி நேர ஆய்வுக்குப் பின்னர் இந்த காணொளி சில கனடிய கல்லூரி மாணவர்களால் தயாரிக்கப்பட்ட அனிமேசன் காணொளி என்று இனங்காணப்பட்டுள்ளது.

இதே போல் நானும் நண்பர்களும் நேற்று சற்று ஏமாந்தோம். நான் மிகவும் பிடித்து விளையாடும் strategic game age of empire. (இதன் மூலமே மாயன் வரலாற்றையும் முதலில் விரிவாகத் தெரிந்து கொண்டேன்).  இது மைகுராசாவ்டின் ஒரு வெளியீடு. இதன் 1,2 மற்றும் 3 வெளியீடுகள் பூராவும் விளையாடி விட்டு 4 இன் வரவுக்காக சில வருடங்களாக காத்திருக்கிறேன்.



இந்த நிலையில்.. நேற்று இணையத்தில் age of empire 4 இன் முன்னோட்டக் காணொளி என்ற பெயரில் ஒன்றிருக்க பிரமித்துப் போய் பார்த்துக் கொண்டிருந்தோம். இருந்தாலும்.. உள்ளூர ஒரு நம்பிக்கையீனம் பிறக்க மேலும் தகவலைப் பார்த்தால் அது fake.


இணையத்தில் உலாவும் காணொளிகளின் நம்பகத்தன்மை என்பது.. இன்று.. சந்தேகத்திற்குரியதாக மாறி வருகிறது.

மேலும் செய்திகள்.

Labels: , , , , , ,

பதிந்தது <-குருவிகள்-> at 9:05 am

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க