Thursday, December 06, 2012

2012-12-21 உலகம் அழியாது; வதந்திகளை நம்பாதீர் – அமெரிக்கா

அண்மைய ஆண்டுகளாக 2012 பற்றி  மாயன் நாட்காட்டியை மையமாக வைத்து பல மாயைகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. அவை மக்கள் மத்தியில் பல வழிகளிலும் குறிப்பாக பேஸ்புக்.. ரிவிட்டர்.. யுரியூப் போன்ற சமூக வலை அமைப்புக்களூடும் பரப்பிவிடப்படுகின்றன.

இவற்றிற்கு எல்லாம் சிகரம் வைத்தாற்போல்.. பரப்பப்படும் வதந்தி தான் 21-12-2012 இல் பூமியின் ஆயுள் முடிவுக்கு வரப் போவதாக பரப்பப்படும் வதந்தி. இன்னும் சிலரோ அது 12-12-2012 இலேயே நடந்திடும் என்று எச்சரிக்கின்றனர்.ஹாலிவூட்டுக்கும் இந்த மாயைகளைப் பரப்பி விடுவதில் ஒரு பங்களிப்பு இருக்கிறது. அது தயாரித்து சில ஆண்டுகளுக்கு முன் வெளியிட்ட 2012 திரைப்படமும் மக்கள் மனதில் இந்தப் பயபீதியை அதிகரித்துவிட்டுள்ளது.

மேலும்.. பூமிப்பந்தில் நிலவும் சற்று மாறுதலான காலநிலைப் போக்கும் மக்கள் இவற்றையிட்டு கொஞ்சம் நம்ப அல்லது அச்சப்பட செய்வதோடு வதந்தி பரப்புவோருக்கு அவையே வலுச் சேர்க்கவும் செய்கின்றன.

ஆனால் நிஜம் என்பதோ.. 2000ம் ஆண்டு எதிர்பார்க்கப்பட்ட Y2K மிலேனியம் கணணிப் பிரச்சனை போல... இதுவும் அமைதியாக எந்தப் பிரச்சனையும் இன்றி வதந்திகளை முறியடித்து 22-12-2012 நல்ல சுப நாளுக்கான விடியலோடு முடியத் தான் போகிறது. 

அதற்கிடையில் மக்கள் அச்ச மிகுதியால் தவறான முடிவுகளை செயல்களைச் செய்வதில் இருந்தும் தங்களை தற்காத்துக் கொள்வது அவசியம். 

இது குறித்து அமெரிக்க விஞ்ஞானிகள் தரும் தகவல் இங்கு...

மேலும் நாசாவின் எரிகல் மழை பற்றிய எச்சரிக்கைக்கும் 2012 உலக அழிவிற்கும் சிலர் முடிச்சுப் போட விளைகின்றனர். அது சுத்த பித்தலாட்டத்தனமாகும்.விண்வெளியில் உள்ள எரிகற்கள் (Meteoroids) தினமும் தான் எமது பூமியின் ஈர்ப்பு வலயத்துக்குள் நுழைகின்றன.  அவற்றில் பல பூமியின் அடர்த்தியான வளிமண்டலத்தில் உராய்வு மிகுதியால் எழும் வெப்பத்தில் எரிந்து சாம்பலாகிவிடுகின்றன. சில சிறிய அளவில் பூமியில் மேற்பரப்பில் 75% சமுத்திரங்களுக்குள் விழுகின்றன. வெகு சில தரையில் வீழ்ந்தாலும் மக்கள் வாழும் இடங்களில் விழுவதற்காக நிகழ்தகவு வெகு சிறிது.

அந்த வகையில் சூரியனை அண்மிக்கையில்.. துகள்களாகும் இந்த விண்கல்லும் (Asteroid) அல்லது Rock comet (பாறை வால்நட்சத்திரம்)...  பூமியின் வளிமண்டத்துக்குள் எரிகற்களாகவே விழும். அந்த வகையில்.. இது ஒரு எரிகல் மழையை உருவாக்கும். இது பூமியைப் பொறுத்தவரை சாதாரணம். அதுவும் துருவ மக்களின் பொழுதுபோக்கு. இதற்குப் போய் அச்சப்பட வேண்டிய அவசியம் இல்லை. மாறாக.. எரிகல் மழையை கண்டுகளித்து இன்புறுங்கள். படங்களாக சேமித்து வைத்து அழகு பாருங்கள். :lol: 

Labels: , , , , , , ,

பதிந்தது <-குருவிகள்-> at 3:59 pm

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க